ஆல் இஸ் வெல்.. பதற்றமான சூழலில் டிரம்ப் செய்த அந்த டிவிட்.. அதிபரால் கொதித்தெழும் அமெரிக்கர்கள்!
ஈரானுடன் சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆல் இஸ் வெல் என்று டிவிட் செய்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: ஈரானுடன் சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆல் இஸ் வெல் என்று டிவிட் செய்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க படைகளை ஈரான் தாக்க தொடங்கி உள்ளது. அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். ஈரானில் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலுக்கும், சுலைமானி கொலைக்கும் பதிலடியாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.

என்ன தாக்குதல்
இந்த தாக்குதலும் அதற்கு செய்யப்பட பதில் தாக்குதலும் பெரிய போரை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள், எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்று விவரம் வெளியாகவில்லை. இதற்கு பின் என்ன நடந்தது என்றும் விவரம் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் அமெரிக்கா
ஆனால் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா விரைவில் பதிலடி கொடுக்கும் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த ''ஆல் இஸ் வெல்'' டிவிட்டை செய்தார். அதில், எல்லாம் நலம். ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது .
|
எவ்வளவு சேதம்
எவ்வளவு சேதம் நடந்தது, எத்தனை பேர் பலியானார்கள் என்று கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதுவரை எந்த பிரச்சனையுமில்லை. உலகிலேயே நம்மிடம் மிகவும் சக்தி வாய்ந்த, அதிக பலம் வாய்ந்த ராணுவம் இருக்கிறது. நாளை காலை நான் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவேன், என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

படை என்ன
அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த சூழலில், டிரம்ப் இப்படி ''ஆல் இஸ் வெல்'' என்று டிவிட் செய்து இருப்பது அமெரிக்கர்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாகி உள்ளது. தேவையில்லாமல் போரை தொடங்கியது மட்டுமின்றி, இப்போது தாக்குதல் நடந்த பின் கூலாக ஆல் இஸ் வெல் என்று டிவிட் செய்வது தவறு என்று அமெரிக்கர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications