“8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன”.. இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் சொன்ன புது தகவல்!
வாஷிங்டன்: "இந்தியா - பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை 8 மாதங்களில் நிறுத்தினேன். நான் இந்தியா, பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்குள் சண்டை வெடித்தது. 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவர்களிடம், 'சமாதானத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை' என்று தெரிவித்தேன். அதன் பிறகே அவர்கள் போரை நிறுத்தினர்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவ படைகள் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து மே 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவம் டிரோன்களைக் கொண்டும், ஏவுகணைகளை கொண்டும் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. இதையடுத்து, பேச்சுவார்த்தையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களின் எண்ணிக்கை குறித்து மீண்டும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த மோதலில்தான், தான் சமாதானத் தூதுவராகச் செயல்பட்டு, இரு நாடுகளுக்கிடையே ஏற்படவிருந்த பெரும் போரைத் தடுத்ததாக டிரம்ப் மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மியாமி நகரில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய டொனால்ட் டிரம்ப், "இந்தியா - பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை 8 மாதங்களில் நிறுத்தினேன். நான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது போர் தொடங்கப்போகிறது என்று செய்தித்தாள்களில் படித்தேன். எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அணு ஆயுதம் ஏந்திய நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போர் செய்யப்போவதை நான் அறிந்தேன்.
அவர்களிடம், 'சமாதானத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை' என்று தெரிவித்தேன். அதன் பிறகு அடுத்த நாள் 'நாங்கள் சமாதானம் செய்து கொண்டோம்' என்று எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர்கள் போரை நிறுத்தினர். " என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போரை டிரம்ப் நிறுத்தவில்லை என்று இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. எனினும், டிரம்ப் தான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகச் சொல்வதை இன்னும் நிறுத்தவில்லை.
டிரம்ப் இதற்கு முன்பு ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறினார். தற்போது, 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications