சீனா, இந்தியா மீது 100 சதவீதம் வரி.. ஐரோப்பாவிற்கு அழுத்தம் தரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா: ஒரு பக்கம் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மறுபக்கம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியின் ஒரு பகுதியாக, சீனா மற்றும் இந்தியா மீது 100% வரை வரிகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தால் மட்டும் புதின் இறங்கி வருவார் என்று டிரம்ப் நம்புவதால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

ரஷ்யா உக்ரைன் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. ரஷ்யாவை பொறுத்தவரை உக்ரைனிடம் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப தர முடியாது என கூறி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வரும் உக்ரைன் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Trump urges EU officials to impose tariffs of up to 100 on China and India

டிரம்பிற்கு தலைவலி

உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் உள்ளது. அதேநேரம் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர நீண்ட காலமாகவே அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால் போரை முடிவுக்கு கொண்டு ரஷ்யா தயார் என்றாலும், அதற்கு நோட்டோ உடன் சேரக்கூடாது, இழந்த பகுதிகளை திரும்ப கேட்கக்கூடாது என பலவிஷயங்களை கூறி வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வரவில்லை.. எப்படியாவது ரஷ்யாவிற்கு பாடம் கற்பிக்க நினைத்த அமெரிக்காவுக்கு இது தலைவலியாக மாறி உள்ளது.

இந்தியா காப்பாற்றுகிறது

தற்போதைய நிலையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது தான், அதன் பொருளாதாரத்தை காப்பாற்றுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்புகிறார். அந்த பணம் தான், உக்ரைன் மீதான போரைத் தொடர ரஷ்யாவிற்கு நிதி உதவி செய்வதாக அமெரிக்கா கருதுகிறது. இதன் காரணமாகவே இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க விதித்துள்ளது. ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை நிறுத்தினால், உடனே வரியை திரும்ப பெறுவதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது. இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக டிரம்ப் இன்று ட்வீட் போட்டிருந்தார்.

மோடியுடன் பேச ஆர்வம்

அந்த பதில் அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தகத் தடைகளை நீக்குவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். இந்த இரு நாடுகளுக்கும் ஒரு வெற்றிகரமான முடிவு எட்டப்படும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

100 சதவீதம் வரி

அதேநேரம் இன்னொரு பக்கம் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியின் ஒரு பகுதியாக, சீனா மற்றும் இந்தியா மீது 100% வரை வரிகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளாராம். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையாணைகள் குறித்த தூதர் டேவிட் ஓ'சுலிவன் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் ஒ இந்த கோரிக்கையை வைத்துள்ளாராம். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றால், அமெரிக்காவும் இதேபோன்ற வரிகளை விதிக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். அப்படி ஒரு முடிவெடுத்தால், ரஷ்யாவைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+