வேணாம் விளாடிமிர்.. நெருப்போடு விளையாடுறீங்க! கடும் கோபத்தில் டொனால்ட் டிரம்ப்! உருக்குலைந்த உக்ரைன்
நியூயார்க்: அமெரிக்காவின் வற்புறுத்தலையும் மீறி ரஷ்யா, உக்ரைன் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தும் உலக நாடுகளின் முயற்சி இதுவரை பலனளிக்காத நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்துள்ளார். புடின் நெருப்புடன் விளையாடுவதாக அவர் பதிவிட்டு இருப்பது உலக அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
அமெரிக்க அதிபராக தான் பதவியேற்றால் உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் போரை நிறுத்த ஆர்வம் காட்டி வருகிறார்.
கடந்த மாதம் துபாயில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா முன் வைத்தது. அதனை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டாலும் ரஷ்யா ஏற்கவில்லை.

தொடர்ந்து பொருளாதார தடைகள் தீவிரப்படுத்தப்படும் என ரஷ்யாவுக்கு அமெரிக்காவும், ஜி 7 நாடுகளும் எச்சரிக்கை விடுத்தன. இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதற்குப் பிறகுதான் அமெரிக்கா உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக உக்ரைனும் ரஷ்யாவை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. குறிப்பாக மாஸ்கோ விமான நிலையம் மற்றும் அதிபர் புடினை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த ரஷ்யா உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்தது. ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி ஏற்படுத்தும் முயற்சி இதுவரை பலனளிக்காத சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் உக்ரைனில் இதுவரை இல்லாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், "நான் இல்லையென்றால் ரஷ்யாவுக்கு மிகவும் மோசமான விஷயங்கள் நேர்ந்திருக்கும். புடின் நெருப்புடன் விளையாடுகிறார்!" என்று பதிவிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் கடந்த வாரத்தில் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினை வைத்தியம் போன்றவர் என விமர்சித்ததோடு ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என எச்சரித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே 'மிக மோசமான விஷயங்கள்' ரஷ்யாவுக்கு நேர்ந்திருக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அது நேரடியான தாக்குதலா அல்லது பொருளாதார தடையா? என்பது குறித்து தெரியவில்லை.
அமெரிக்காவின் பிரபலமான ஊடகங்களான தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல் ( The Wall Street Journal) மற்றும் சிஎன்என் (CNN) வெளியிட்டிருக்கும் தகவல் படி ட்ரம்ப் இந்த வாரத்திலேயே ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம் என சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இறுதி முடிவை அவர் இன்னும் எடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மே 25-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்யாவுக்கு மேலும் கடுமையான தடைகள் விதிப்பது குறித்து நிச்சயமாக யோசித்து வருகிறேன்," என உறுதியாக கூறியது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், உக்ரைன் உடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாததால் ட்ரம்ப் ரஷ்யாவின் மேல் மிகக் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கோபமே, புடினை "கண்ணியமற்றவர்" என விமர்சிக்க வைத்தது என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications