யுஎஸ் தேர்தல்: இப்பவே பல்டியடிச்சிட்டாரே டொனால்ட் ட்ரம்ப்!
வாஷிங்டன்(யு.எஸ்): தன்னுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா என்ற பெர்னி சான்டர்ஸ்க்கு, முதலில் சம்மதம் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், தற்போது பின் வாங்கியுள்ளார்.
குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான உட்கட்சி தேர்தலில், குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், தேவையான 1237 டெலிகேட்ஸ் வாக்குகளை விட கூடுதலாக ஒரு வாக்கு பெற்றுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராவது உறுதியாகி விட்டது. கட்சியின் தேசிய மாநாட்டில் முறைப்படி இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

ஜனநாயகக் கட்சியில் யார் ?
எதிரணியான ஜனநாயகக் கட்சியில், வாஷிங்டன் மாநிலத்தில் வெற்றி பெற்ற பெர்னி சான்டர்ஸ் வசம் 1542 டெலிகேட்ஸ் வாக்குகள் உள்ளன.
541 சூப்பர் டெலிகேட்ஸ்களையும் சேர்த்து ஹிலரி க்ளிண்டன் 2309 வாக்குகள் அளவில் உள்ளார். இன்னும் 74 டெலிகேட்ஸ் கிடைத்து விட்டால் ஹிலரி ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளர் ஆகிவிடுவார்.
யு எஸ் வர்ஜீன் தீவுகள், போர்ட்டோ ரிக்கோ, கலிஃபோர்னியா, மோன்டனா, நியூ ஜெர்ஸி, நியூ மெக்சிகோ, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா மாநிலங்கள் மற்றும் வாஷிங்கடன் டிசி யில் ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

பெர்னியின் கணக்கு!
கலிஃபோர்னியா மாநிலத்தில் மட்டும் 475 டெலிகேட்ஸ் வாக்குகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி அங்கு பெர்னிக்கும் ஹிலரிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
இங்கு கிடைக்கும் வாக்குகள் சதவீதத்தின் அடிப்படையில், டெலிகேட்ஸ்கள் பிரித்து அளிக்கப்படுவார்கள். கிட்டத்தட்ட சரிபாதி டெலிகேட்ஸ்கள் இருவருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.
கலிஃபோர்னியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றால், டெலிகேட்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் ஹிலரிக்கு ஆதரவளிக்கும் சூப்பர் டெலிகேட்ஸ்களை தன் வசம் இழுக்கலாம் என்பது பெர்னியின் கணக்கு!

ஒத்தைக்கு ஒத்தை தயாரா?
குடியரசுக் கட்சியின் அறிவிக்கப்படாத வேட்பாளராகி விட்ட ட்ரம்ப்-விடம் நேருக்கு நேர் விவாதம் செய்து வெற்றி பெற்றால் கலிஃபோர்னியாவில் செல்வாக்கு அதிகரிக்கும் என்பது பெரினியின் எதிர்பார்ப்பாகும்..
புதன்கிழமை ஏபிசி தொலைக்காட்சியில் ட்ரம்ப் விடம், பெர்னி நேரடி விவாதம் செய்ய விரும்புகிறார். ஏற்பீர்களா என்று கேட்கப்பட்டது.
உடனடியாக ‘ எவ்வளவு பணம் தருவார் ? நல்ல அறப்பணிகளுக்கு அதை செலவிடலாமே. நான் பெர்னியுடன் விவாதம் செய்ய விருப்பமாக உள்ளேன்' என்றார்

அது வேற வாய்?
பதிலுக்கு ‘ஆட்டத்துக்கு தயார். கலிஃபோர்னியா தேர்தலுக்கு முன்னால் ட்ரம்ப்-பிடம் விவாதம் செய்ய காத்திருக்கிறேன்' என்று பெர்னி ட்விட்டரில் சம்மதம் தெரிவித்தார்.
தீவிர இடதுசாரியான பெர்னியிடம் விவாதித்தால், ஏடாகூடமா சிக்கி சின்னாபின்னமாகி விடுவோம் என்று நினைத்தாரோ என்னவோ? பெர்னியிடம் விவாதிக்க விரும்பவில்லை என்று ட்ரம்ப் வெள்ளிக்கிழமை பல்டி அடித்து விட்டார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் ஹிலரி முதல் நிலையில் இருப்பதால், இரண்டாம் நிலையில் உள்ள பெர்னியுடன் விவாதிப்பது சரியாக இருக்காது என்று காரணம் கூறியுள்ளார்.

விடாது துரத்தும் பெர்னி!
புதன் கிழமை ஆரம்பித்த ஆட்டம் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது. ஆனாலும் பெர்னி விடுவதாக இல்லை.
ஒரு நாளைக்கு பல தடவை பல்டி அடிக்கும் பழக்கம் கொண்ட ட்ரம்ப் மீண்டும் ஒரு பல்டி அடித்து விவாதிக்க வருவார் என நம்புவதாக செய்தியாளர்களிடம், பெர்னி லாஸ் ஏஞ்சல்ஸில் கூறியுள்ளார்.
குடியரசுக் கட்சியின் அறிவிக்கப்படாத வேட்பாளர் ஆனது முதல் ட்ரம்ப் சற்று நிதானத்தை கடைப்பிடிக்க முயல்கிறார்.

ஹிலரியா ? ட்ரம்ப் ஆ?
கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து தன்னிடம் தோற்றுப் போன மார்க்கோ ரூபியோவை, செனட் தேர்தலில் நிற்குமாறு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். கட்சியின் வெற்றிக்காக ரூபியோ போட்டியிடுவது அவசியம் என்று அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது, ஹிலரியா ? ட்ரம்ப் ஆ ? என்பது தான் அமெரிக்கர்கள் முன் உள்ள கேள்வி. பெண்கள், கருப்பு, லத்தீன் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஹிலரி முன்னிலையில் இருக்கிறார்.
கலிஃபோர்னியா தேர்தலுக்கு பின்னர், பெர்னியுடன் சமசர பேச்சுவார்த்தை ஏற்பட வாய்ப்புள்ளது. ஒபாமாவைப் போல், முக்கிய அமைச்சர் (செக்ரட்டரி) பதவி கொடுத்து, பெர்னியின் ஆதரவை பெற்றுக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
வரப்போகும் மாதங்கள் அமெரிக்காவில் தேர்தல் திருவிழா இன்னும் களைகட்டும்..
-இர தினகர்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications