ஒன்றுகூடும் 3 தலைவர்கள்! டிரம்ப், ஜி ஜின்பிங்க், புதின் சந்திப்பு! என்ன நடக்கப்போகிறது?

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் நவ.19ம் தேதி நேரில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பு சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றிருக்கிறது. பேச்சுவார்த்தையின்போது என்ன முடிவுகள் எடுக்கப்படும்? இந்த முடிவுகளால் யாருக்கு பாதகமாக.. சாதகமாக மாறும்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Financial Times செய்தி ஊடகம் இது குறித்து முக்கியமான கட்டுரையை இன்று வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த 1945ம் ஆண்டு இதே போல நடந்த 'யால்டா' மாநாட்டை நினைவுப்படுத்தியிருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, உலக ஒழுங்கை தீர்மானிக்க 1945ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட், பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் சோவியத் ரஷ்யாவின் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் 'யால்டா' மாநாட்டில் சந்தித்தனர். அதுபோன்று நவ.19ல் நடக்க இருக்கும் சந்திப்பு 'யால்டா 2.O' என Financial Times விவரித்திருக்கிறது.

Trump Xi and Putin

இந்த சந்திப்புக்கு முன்னதாக.. சீனா, ஹாங்காங், தைவான், ஜப்பான், தென்கொரியா என 21 நாடுகள் அடங்கிய ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (APEC) மாநாடு நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. உலக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62 சதவீதமும், உலக வர்த்தகத்தில் பாதி அளவும் கொண்டுள்ள இந்த நாடுகளின் மாநாட்டில்.. விநியோக சங்கிலி பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த மாநாட்டை அடுத்து தான் சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைவர்கள் சந்திக்கின்றனர்.

வழக்கமாக வெளிநாட்டு தலைவர்கள் உடனான சந்திப்புகளை மிக கவனமாக திட்டமிடும் சீன அதிபர், இந்த முறை அமெரிக்க மற்றும் ரஷ்யா உடன் இணைந்து.. எந்த ஒரு முன்நிபந்தனை அல்லது நிகழ்ச்சி நிரலும் இன்றி பேச ஒப்புக் கொண்டுள்ளனர். அதேபோல, இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிலைப்பாடு அணு ஆயுத கட்டுப்பாடு குறித்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில்.. கடந்த 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போன்ற மாநாட்டில், சீனா புறக்கணிக்கப்பட்டதால் மீண்டும் அது போன்ற ஒரு புறக்கணிப்பை இந்த முறையை சீனா விரும்பவில்லை என்பதுதான். மட்டுமல்லாது உக்ரைன் மற்றும் ஈரான் போர் விவகாரங்களில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளவும் சீனா தயங்குகிறது. இதற்கு மாறாக உலகளாவிய நிலைத்தன்மை குறித்து பேசி.. தனது ராஜதந்திர வலிமையை காட்டவே அந்நாடு விரும்புகிறது என்று சிங்குவா பல்கலைக்கழக பேராசிரியர் டா வெய் கூறியிருக்கிறார்.

அப்படியே ரஷ்யா பக்கம் வந்தால்.. ஐரோப்பாவில் தனக்கு சாதகமான சூழல் உருவாக வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. அணு ஆயுதங்களை தவிர்த்து விட்டு பார்த்தால்.. பொருளாதார ரீதியாக அமெரிக்க மற்றும் சீனாவுக்கு இணையான நாடாக ரஷ்யா இல்லை. இருந்தாலும் இந்த சந்திப்பு, புதினுக்கு உலகத் தலைவர்களில் ஒருவர் என்ற கௌரவத்தை தருகிறது என்பதால்.. ரஷ்யா இந்த மாநாட்டை புறக்கணிக்க விரும்பவில்லை என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் கபுவேவ் கூறியுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் எட்டப்பட்ட வர்த்தக போர் நிறுத்த ஒப்பந்தம், அதேபோல ஜனவரி 10ஆம் தேதியுடன் முடிவடையுள்ள அரியவகை கனிமங்கள் ஒப்பந்தம் ஆகியவை குறித்து.. இந்த சந்திப்பின்போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிய வகை கனிமங்கள் விஷயத்தில், சீனா உறுதி கொடுத்தபடி மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே கனிமங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சந்திப்பில் அரியவகை கனிமங்கள் குறித்து சீரியஸாக பேசப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல, இந்த சந்திப்பின்போது.. என்விடியா முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் விஷயம் குறித்து பேசப்படுவது தவிர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+