போனியாகாத ஹாலிவுட் படங்கள்.. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாம்! டிரம்ப் செய்த அடுத்த சேட்டை
வாஷிங்டன்: ஹாலிவுட் சினிமா துறை இழப்பை சந்தித்து வருவதாகவும், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியுள்ள டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு படங்களுக்கு 100% வரியை போடுவதாக அறிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே வெளிநாட்டு பொருட்கள் மீது சகட்டு மேனிக்கு வரியை போட்டதால் உலக வர்த்தகமே முடங்கி போயுள்ளது. இப்படி இருக்கையில் தற்போது ஹாலிவுட் படங்களை தவிர்த்து மற்ற சினிமாக்களுக்கு வரியை போட்டிருப்பது விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

நான் அதிபராக வந்தால் 'அமெரிக்காதான் முதல்' என்கிற கொள்கையை அமல்படுத்துவேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். அதிபரான பிறகு சில விஷயங்களையும் அமல்படுத்தினார். இப்படி வந்ததுதான் 'பரஸ்பர வரி'. அதாவது அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரியை போடுகிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் வரியை போடும். இந்த வரி நேற்று வரை தொழில்துறைகளுக்கு மட்டுமே இருந்தது. இன்று இது சினிமா துறையிலும் அமலாகியுள்ளது. இது பற்றி பேசிய டிரம்ப்,
"அமெரிக்க திரைப்படத்துறை வேகமாக அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. பிற நாடுகள் நமது ஸ்டுடீயோக்களை பயன்படுத்திக்கொள்கின்றன. ஹாலிவுட் பகுதி பகுதியாக சிதைவுண்டு வருகிறது. இது யதார்த்தமாக நடப்பதாக தெரியவில்லை. வேணும்னே செய்யுற மாதிரி இருக்கு. அப்படின்னா இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல். சினாமாதானே என்று நம்மால் சும்மா இருந்துவிட முடியாது. நாளைக்கு வேறு துறைக்கு இதே நிலைமை வரலாம்.
எனவே, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இங்கு திரையிடப்படும் அத்தனை படங்களுக்கும் 100% வரி விதிக்கப்படும். இதற்கான உத்தரவை வணிக, வர்த்தக துறை அதிகாரிக்கு பிறப்பித்திருக்கிறேன். நம்மூரில் திரும்பவும் சினிமா தயாரிப்போம்" என்று கூறியிருக்கிறார்.
இந்த வரி சீன திரைப்படங்களை மையப்படுத்திதான் இருக்கின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது, சீன திரைப்படங்கள் கடந்த ஆண்டு அமெரிக்காவில் சக்கை போடு போட்டன. ஆனால் ஹாலிவுட் திரைப்படங்கள் வழக்கமான கதைகளை கொண்டு அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்தன. எனவே இதன் வருமானம் தொடர்ச்சியாக சரிய தொடங்கியது.
மட்டுமல்லாது ஹாலிவுட் திரைப்படத்துறையின் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர்.
இவையெல்லாம் ஹாலிவுட் துறைக்கு சவாலை ஏற்படுத்தியது. எனவேதான் டிரம்ப் வரியை போட்டிருக்கிறார். ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனுசனை கடித்த கதையாக, திரைப்பட துறையிலும் டிரம்ப் கையை வைத்திருக்கிறார். சீனாவும் இந்த விஷயத்தில் ஒன்னும் லேசுபட்ட ஆள் கிடையாது. தங்கள் நாட்டில் தங்கள் தயாரிப்பு படங்களுக்கு 80 சதவிகிதத்தை ஒதுக்கியிருக்கிறது.
குறிப்பாக ஹாலிவுட் படத்திற்கு தியேட்டர்கள் குறைவாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் அமெரிக்காவை கடுப்பாக வைத்திருக்கிறது. இது ஹாலிவுட் வருமானத்தை பாதித்தது.
இந்த காரணங்கள் தவிர, ஸ்ட்ரீமிங் துறையின் வளர்ச்சியும் ஹாலிவுட்டை பாதித்திருக்கிறது. குறிப்பாக ஓடிடி-யில் வெளியாகும் தொடர்கள் ஹாலிவுட் படங்களுக்கு சவாலாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அவசரமாக வான் வழியை மூடிய ஈரான்! முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்.. தாக்குதல் திட்டமிடும் டிரம்ப்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications