Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதிலுக்கு பதில் அடி நிச்சயம்.. டிரம்ப்-க்கு ஈரான் கொடுத்த வார்னிங்.. அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அடுத்தடுத்து வரும் எச்சரிக்கை மக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட எச்சரிக்கைக்கு பதிலளித்த ஈரான், தங்களது அடிப்படை கட்டமைப்புகள் தாக்கப்பட்டால் அதேபோல் பதிலடி திருப்பி கொடுக்கப்படும் என வெளிப்படையாக அறிவித்துள்ளது. இது அமெரிக்க அரசுக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Trump Iran war Trump Iran Warning Strait of Hormuz Crisis Iran Response to Trump Trump Power Plant Threat US Iran Tensions 2026 Trump Iran threat Strait of Hormuz Iran response in kind Esmail Baghaei warning Trump Truth Social post Power Plant Day Iran Bridge Day attack open the Strait of Hormuz Trump hell warning US Iran infrastructure strike Iran retaliate US targets Hormuz blockade crisis Trump expletive warning Iran armed forces response Tuesday deadline Iran

ஈரானின் வார்னிங்
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அல் ஜசீராக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் சமமான பதிலடி கொடுக்கும் என எச்சரித்தார்.

இஸ்மாயில் பாகாயி கூறுகையில், 'ஈரானின் அடிப்படை கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு இணையான அமெரிக்காவுக்கு சொந்தமான அல்லது அதன் தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் அமைப்பையும் எங்கள் ஆயுதப்படைகள் குறிவைத்து தாக்கும்' என எச்சரிக்கை விடுத்தார். இது அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான தாக்குதல்களை மேலும் மோசமாக்கும் என்பதை உணர்த்துகிறது. இதற்கு ஏற்றார் போல் கச்சா எண்ணெய் விலை 114 டாலர் வரையில் உயர்ந்தள்ளது. தங்கம் விலை கிட்டத்தட்ட 0.5 சதவீதம் ஸ்பாட் சந்தையில் குறைந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை
அமெரிக்கா, ஈரான் நாடுகளின் அடுத்ததடுத்த எச்சரிக்கை பதிவுக்கு முக்கியமான காரணமாக இருப்பது Strait of Hormuz திறப்பு தொடர்பான பிரச்சனை தான். உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாக இருக்கும் இந்த நீரிணையை திறக்க ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது.

இந்த நீரிணை மூடப்பட்டதால், உலகளாவிய எரிபொருள் சந்தைகளில் பெரிய விலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் எரிபொருள், எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. இது பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் அடுத்தடுத்து பாதிக்க துவங்கியுள்ளது.

டிரம்பின் கடும் மிரட்டல்
ஈரான் நாட்டின் எச்சரிக்கைக்கு முன்பு டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகள் குறிவைக்கப்படும் என்றும், 'ஹார்முஸ் நீரிணையை திறக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்' என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அல் ஜசீராக்கு அளித்த பேட்டியில் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

பாதிப்பு பெருசு..
அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான மோதல் வெறும் அரசியல் அல்லது ராணுவ விவகாரமாக மட்டுமல்ல; உலகளாவிய பொருளாதாரத்தையும் நேரடியாக பாதிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக, உலக பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருக்கும் எரிபொருள் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் வெளிப்படையாக தெரிவித்துள்ள இந்த 'பதில் தாக்குதல்' நிலைப்பாடு மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய கட்டமைப்புகள் கூட இலக்காக கொண்டு தாக்கப்படலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+