ஜப்பானில் உச்சக்கட்ட பதற்றம்.. எச்சரிக்கையா இருங்க! மீண்டும் சுனாமியா? வெளியான பரபர அறிவிப்பு
டோக்கியோ: தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஜப்பான் நாட்டில் சுனாமி ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று இரவு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன.
நேற்று 6.6 என்ற ரிக்டர் அளவில் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் பீதியில் உறைந்த மக்கள் வீதியில் தஞ்சமடைந்தனர்.

பாதிப்பு இல்லை
தைடுங்கி நகரின் வடக்கு பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் நிலநடுக்க ஏற்பட்டது. ஆனாலும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மதியம் தைவானில் மீண்டும் கட்டிடங்கள் நடுங்கின.

7.2 ரிக்டர் அளவு
குறிப்பாக தைவானின் கடலோர பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டது. பிற்பகல் 2:44 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் நேற்றிரவு ஏற்பட்டதை விட சக்திவாய்ந்ததாக இருந்தது. அது 7.2 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

வீடியோக்கள்
இந்த தீவிர நிலநடுக்கத்தால் தைவானின் யுலி நகரத்தில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தைவான் நாட்டில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் ஒன்று பொம்மை போல் குலுங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக தைவான் மற்றும் அதன் அருகாமையில் உள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம். இதன் காரணமாக மாலை 4 மணியளவில் ஒரு மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்று கூறப்பட்டது. ஆனால், உயரமான அலைகள் ஏதும் எழுந்ததாக தெரியவில்லை. இருப்பினும் சுனாமி அபாயம் காரணமாக மக்களும் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications