இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி.. ஒருவர் பலி.. 10க்கும் மேற்பட்டோர் காயம்!
இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது. இதனால் ஊருக்குள் கடல் நீர் வெள்ளம் போல் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
Recommended Video

சுலேவேசி: இந்தோனேஷியாவை சுனாமி அலைகள் தாக்கின. இதனால் ஊருக்குள் கடல்நீர் வெள்ளம் போல் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். சுனாமி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேஷிய பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்தது. 2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

இந்தோனேஷியாவில் சுனாமி
இந்நிலையில் சுலவேசியின் பலு பகுதியில் சுனாமி அலைகள் தாக்கின. திடீரென கடலில் எழுந்த சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் மசூதி ஒன்று பலத்த சேதமடைந்தது. மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். மாடிகளில் தஞ்சமடைந்தனர்.
|
ஆர்ப்பரித்து வந்த அலைகள்
இருப்பினும் ஆர்பரித்து வந்த சுனாமி பேரலை கடற்கரையோ கட்டிடங்களை தாக்கியது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் பலி
இதில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். சுனாமியால் பலு பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3 மீட்டர் உயரத்துக்கு
சுனாமியை தொடர்ந்து பல்வேறு தீவுகளில் உள்ள மக்களும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சுனாமியால் 3 மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் கரையோரங்களில் இருந்த வீடுகள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன.

அதிகரிக்கும் என அச்சம்
உயிர் பலி, பொருட் சேதம் உள்ளிட்டவை குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சுனாமி பெரும்பாலான கடற்கரையோர நகரங்களை தாக்கியுள்ளதால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications