சிலி நில நடுக்கம்: ஜப்பானை தாக்கியது சிறிய சுனாமி
டோக்கியோ: சிலி நாட்டில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஜப்பானில் சுனாமி ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான தூரம் 17,228 கி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் இக்யூக் நகரின் வடகிழக்கில் 99 கிமீ தொலைவில் பசிபிக் கடலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 8.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி அலைகள் எழுந்தன. இதனால் கட்டிடங்கள் சேதமடைந்தன, பல்வேறு இடங்களில் தீ விபத்துகளும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இடிபாடுகளில் சிக்கியும், மாரடைப்பு ஏற்பட்டும் 6 பேர் பலியாகினர்.
இக்யூக் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரத்தில் 7.8 அளவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 5.6 மற்றும் 5.8 அளவுக்கு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அதன் அருகில் உள்ள ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளது. வடகிழக்கு ஜப்பானில் பசிபிக் கடலோரம் அமைந்துள்ள இவாடே என்ற இடத்தில் இன்று காலை 40 செமீ அளவுக்கு அலைகள் எழுந்தன. இதையடுத்து பசிபிக் கடலோரம் அமைந்துள்ள ஹொக்கைடோ, டொஹொகு, கன்டோ பகுதியில் சில இடங்கள், இசு மற்றும் ஒகஸவாரா தீவுகள் ஆகிய இடங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் இவாடேவில் உள்ள குஜி துறைமுகத்தில் இன்று காலை 6.52 மணிக்கு 20 செமீ உயரத்திற்கு அலைகள் எழுந்தன. சிறிது நேரம் கழித்து அதிக உயரத்திலான சுனாமி அலைகள் வந்தன என்று ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந் நிலையில் சிலி நிலநடுக்கத்தையடுத்து வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications