இந்தியாவுக்கு எதிராக பெரிய சதி.. பாகிஸ்தான் மீதான காதலால் துருக்கி ரகசிய திட்டம்! தூள்தூளாக போகுதே

Subscribe to Oneindia Tamil

அங்காரா: பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இந்தியாவுக்கான பாதுகாப்பு துறை தொடர்பான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் ஏற்றுமதியை ரகசியமாக துருக்கி தடை செய்துள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வரும் துருக்கியின் இந்த முடிவு இந்தியாவை பாதிக்குமா? துருக்கியின் இந்த முடிவுக்கான பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

துருக்கி அல்லது துர்க்கியே.. இங்கு வசிக்கும் மக்களிடம் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்கள். இதனால் இஸ்லாமிய நாடாகவே துருக்கி பார்க்கப்படுகிறது. துருக்கி என்றால் வான்கோழி என பொருள்படும் நிலையில் சமீபத்தில் அதன் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்ய ஐநா ஒப்புதல் வழங்கியது.

turkey india pakistan

இந்த துருக்கி என்பது ஒரு குழப்பமிக்க நாடாகும். அதாவது இந்த நாட்டை ஐரோப்பிய நாடு எனவும், மத்திய கிழக்கு நாடு என எதிலும் அடையாளப்படுத்த முடியாது. சில வேளையில் ஐரோப்பிய நாடு வரிசையிலும், சில சூழல்களில் மத்திய கிழக்கு நாடு பட்டியலிலும் துருக்கி எனவும் அடையாளம் காணப்படுகிறது.

குழப்பமான துருக்கி: துருக்கி நாட்டில் மக்கள் தொகை மிகவும் குறைவு. மொத்தம் 8.50 கோடி மக்கள் தான் இருக்கின்றனர். இந்த நாட்டின் அதிபராக ரெசப் தாயிப் எர்டோகன் உள்ளார். இந்தியா - துருக்கி உறவை எடுத்து கொண்டால் எப்போதும் ஒத்துப்போவது இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக இருநாடுகளின் உறவில் விரிசல் என்பது அதிகரித்துள்ளது. அதற்கு முன்பு இருநாடுகள் இடையேயான உறவு சிறப்பானதாக இருந்தா? என கேள்வி எழுப்பினால் அப்படி எதுவும் இல்லை என்று தான் சொல்ல முடியும்.

இந்தியாவுக்கு சதி: இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக துருக்கி ரகசிய சதித்திட்டம் தீட்டி உள்ளது. இந்தியாவா, பாகிஸ்தானா என வரும்போதும் துருக்கி எப்போதும் பாகிஸ்தான் பக்கமே நிற்கும். ஏனென்றால் தொடக்கம் முதலே காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் தான் துருக்கி இருந்துள்ளது. மேலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்திலும் இந்தியாவை துருக்கி விமர்சித்து இருந்தது.

ஏற்றுமதி தடை: அதுமட்டுமின்ற ஐநா மன்றங்களிலும் கூடகாஷ்மீர் விவகாரத்தில் அடிக்கடி மூக்கை நுழைப்பது இந்த துருக்கி தான். இத்தகைய சூழலில் தான் தற்போது துருக்கி நாடாளுமன்றத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் துருக்கிய முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது ஜூலை 10ம் தேதி வெளியுறவுத்துறை குழு விவாதத்தின்பாது துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறையில் முன்னணி ஆயுத நிறுவனமான எஸ்எஸ்பியின் துணை தலைவர் முஸ்தபா முராத் சேகர் தான் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதன்படி இந்தியாவுக்கு பாதுகாப்பு துறை சார்பில் ராணுவ தளவாடங்களை அனுப்புவதை ரத்து செய்வதாகவும், இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பிறந்தவர்: இதுமட்டுமின்றி துருக்கி இந்தியாவுக்கு எதிரான செயல்பாட்டில் இறங்கி உள்ளது. அதாவது அதிபர் ரெசப் தாயிப் எர்டோகனின் ரகசிய துணை ராணுவக்குழுவின் பெயர் SADAT. இது எர்டோகனின் முன்னாள் ராணுவ உதவியாளர் அட்னான் தன்ரிவெர்டி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழு தான் இந்தியாவுக்கு எதிராக இறங்கி உள்ளது. இதில் கவனிக்கத்த விஷயம் என்னவென்றால் காஷ்மீரில் பிறந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்ட சையத் குலாம் நபி ஃபாய் என்பவரை இந்த துணை ராணுவ குழுவில் சேர்த்துள்ளார். இவர் தான் இந்தியாவுக்கு எதிரான செயல்பாட்டில் மூளையாக செயல்பட உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

செய்தி நிறுவனம் உறுதி: இவர் அமெரிக்காவை தளமாக கொண்ட காஷ்மீரி அமெரிக்கன் கவுன்சில் (கேஏசி), பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) உள்ளிட்டவற்றில் இருந்து நிதியுதவி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இஸ்லாமிய உலகின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒன்றியத்துடன் (இஸ்லாம் துன்யாசி சிவில் டாப்லம் குருலுஸ்லாரி பிர்லிகி, ஐடிஎஸ்பி) நெருக்கமாக உள்ளார். இந்த தகவலை NordicMonitor உறுதி செய்துள்ளது. NordicMonitor என்பது ஆன்லைன் செய்தி தளமாகும்.

பாதிப்பு இல்லை: இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான துருக்கியின் நிலைப்பாடு என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவது இல்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்தியா ஏற்கனவே துருக்கியின் பாதுகாப்புநிறுவனம் ஒன்றில் 2 பில்லியன் டாலர் கடற்படை ஒப்பந்தத்தை முன்கூட்டியே ரத்து செய்தது. மேலும் துருக்கி நாட்டுக்கான பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதியையும் நிறுத்தி உள்ளது.

மேக் இன் இந்தியா: இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டம் தான். இந்த திட்டத்தில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முனைப்பில் கொண்டு வரப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டு ஆயுத உற்பத்தி மற்றும் வெடி மருந்துகளின் உற்பத்தி என்பது தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் (2019-20 முதல்) இப்போது வரை பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தி என்பது இந்தியாவில் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2022-23ம் ஆண்டில் பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தி ரூ.1,08,684 கோடியாக இருந்தது.

மூக்கு உடைய வாய்ப்பு: இதன்மூலம் நம் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்கள் தடையின்றி கிடைப்பதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதி ரூ.21,083 கோடியை தொட்டது. இது அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.15,920 கோடியாக இருந்த நிலையில் 2023-2024ல் 32.5% வரை வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் துருக்கியின் ரகசிய சதித்திட்டம் என்பது இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது, மாறாக துருக்கியின் மூக்கு தான் உடைபடும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+