'ஹலால் செக்ஸ்' இங்கே கிடைக்கும்.. இப்படியும் ஒரு 'கடை' துருக்கியில்!
அங்காரா: துருக்கியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், நாட்டிலேயே முதல் முறையாக முஸ்லீம்களுக்கான பிரத்யேகமான ஆன்லைன் செக்ஸ் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளார்.
இது ஒரு ஹலால் செய்யப்பட்ட செக்ஸ் வர்த்தகம் என்றும் அவர் வர்ணிக்கிறார்.
லூப்ரிகன்ட் முதல் செக்ஸ் ஆசையைத் தூண்ட உதவும் மூலிகை மருந்துகள் வரை இங்கு கிடைக்குமாம். மேலும் எப்படி தூய்மையான செக்ஸ் உறவை மேற்கொள்வது என்பது குறித்த அறிவுரைகளையும், டிப்ஸ்களையும் இந்த இணையதளம் வழங்குகிறதாம்.

38 வயது டெமிரல்
ஹலுக் முரத் டெமிரல் என்ற பெயர் கொண்ட இந்த 38 வயது இளம் தொழிலதிபர்தான் இந்த ஆன்லைன் செக்ஸ் தளத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இணையதளத்தின் பெயர் www.bayan.helalsexshop.com. தனது நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் இதைத் தொடங்கியதாக அவர் குறிப்பிடுகிறார்.

அட்வைஸ் கேட்டு அணத்திய நண்பர்கள்
இவரது நண்பர்கள் செக்ஸ் தொடர்பான அறிவுரைகளையும், எங்கு போய் எதை வாங்குவது என்ற விவரத்தையும் டெமிரலிடம் அடிக்கடிக் கேட்பார்களாம். இதை யோசித்துப் பார்த்த அவர் அதை ஒரு வர்த்தகமாகவே செய்ய முடிவெடுத்தாராம். அப்படித்தான் இந்த இணையதளம் உருவானதாம்.

ஆபாசம் அல்ல...
இதுகுறித்து டெமிரல் கூறுகையில், ஆன்லைன் செக்ஸ் வர்த்தகத்தில் பெரும்பாலும் ஆபாசப் படங்களே நிறைந்திருக்கும். இது முஸ்லீம்களுக்கு அவுசகரியத்தைக் கொடுக்கும். ஆனால் எங்களது இணையதளம் அப்படி அல்ல. இங்கு வைப்ரேட்டடர்கள் கிடைக்காது. அதை இஸ்லாம் அனுமதிக்காது. எங்களது இணையதளத்தில் ஆபாசம் இருக்காது.

எது சரி .. எது தவறு...
எங்களது மதத்தில் எது தவறான செக்ஸ் பழக்கங்கள், எது சரியானது என்பது குறித்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதை எங்களது இணையதளத்தில் கொடுத்துள்ளோம். எங்களது தளத்திற்கு நல்ல ஆதரவும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்கிறார் டெமிரல்.

33,000 விசிட்டர்கள்
கடந்த செவ்வாய்க்கிழமை இந்தத் தளம் தொடங்கப்பட்டது. அது முதல் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறதாம். விசிட்டர்களும் பெருகி வருகிறார்களாம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 33,000 விசிட்டர்கள் வந்துள்ளனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications