அல்லா கோபத்தில் இஸ்ரேல் தப்பமுடியாது! பார்லியில் பேசிய துருக்கி எம்பிக்கு மாரடைப்பு - ஷாக் வீடியோ
அங்காரா: ஹமாசுக்கு எதிராக காசாவில் நடக்கும் போரை இஸ்ரேல் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அல்லாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என துருக்கி நாடாளுமன்றத்தில் பேசியபோதே அந்நாட்டு எம்பி மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் என்பது நீண்டகாலமாக நடந்து வந்தது. இந்நிலையில் தான் தற்போது போராக மாறி 2வது மாதமாக நீடித்து வருகிறது. காசாவில் நுழைந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் காசாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. மேலும் இஸ்ரேல் போர் நடவடிக்கையை கைவிட வேண்டும். இஸ்ரேல் மற்றும் காசா இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா உள்பட பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் தான் காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது துருக்கியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இஸ்ரேல் -ஹமாஸ் போர் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சாடெத் கட்சியின் எம்பி ஹசன் பிட்மெஸ் எனும் எம்பி பேசினார்.
NEW: Turkish lawmaker Hasan Bitmez collapses from a heart attack just seconds after saying Israel would "suffer the wrath of Allah."
— Collin Rugg (@CollinRugg) December 12, 2023
The 53-year old lawmaker collapsed after giving his speech in the General Assembly Hall in Ankara, the Capital of Turkey.
"We can perhaps hide… pic.twitter.com/OpoXO2g1z2
53 வயது நிரம்பிய இவர் இஸ்ரேலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது காசாவில் ஹமாசுக்கு எதிரான போரை இஸ்ரேல் கைவிட வேண்டும்.எங்களை அழித்துவிட்டால் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில் இது நடந்தால் மனசாட்சி உங்களை உறுத்தும். அந்த வேதனையில் இருந்து உங்களால் தப்பவே முடியாது. ஒருவேளை நீங்கள் தப்பினாலும் கூட அல்லாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்'' என பேசினார்.
இப்படி அவர் பேசி முடித்த நிலையில் திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிபிஆர் உள்பட பல முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கோகலி துணை ஹசன் பிட்மெஸ் நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த வீடியோ என்பது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications