Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப்க்கு ட்விஸ்ட்.. சீனாவை போல் இங்கிலாந்தும் சலுகை.. இந்தியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: வெளிநாட்டில் உள்ள திறன் மிகுந்த தொழிலாளர்களை ஹெச்1பி விசா தந்து இத்தனை நாட்களாக அழைத்து சென்ற அமெரிக்கா, டிரம்பின் மண்ணின் மைந்தர் கொள்கையால், புறக்கணிக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்பட பல்வேறு வெளிநாட்டு தொழிலாளர்கள் இனி அமெரிக்கா செல்வது கனவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அவர்களை கவர பிற நாடுகள் களத்தில் குதித்து இருக்கின்றன. இதில் சீனாவை தொடர்ந்து இங்கிலாந்தும் புதிய திட்டத்தை செயல்படுத்த ஆர்வமாக உள்ளதாம்.

ஒரு நாடு வளம் பெற வேண்டும் என்றால் திறன் மிகுந்த தொழிலாளர்கள் வேண்டும். அதேபோல் திறன்மிகுந்த தொழில் முனைவோர்களும் வேண்டும். என்ன தான் வளங்கள் இருந்தாலும், வாய்ப்புகள் இருந்தாலும், வெற்றிகரமாக அதனை பயன்படுத்தி பெரிய அளவில் திட்டங்களை உருவாக்கி, எதிர்கால சந்தைகளை திட்டமிட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும். அதேபோல் கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அந்த கண்டுபிடிப்பை உலத்தின் கட்டாயத்தேவையாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் தான், அந்த நாடு, மற்ற நாடுகளை விட தொடர்ந்து வல்லரசு நாடாக நீடிக்க முடியும்.

Twist for us Trump Following China England also offers The jackpot awaits Indians over visa

அமெரிக்கா பொருளாதாரம்

அப்படி இத்தனை ஆண்டுகளாக இருந்து வருவது அமெரிக்காதான். அமெரிக்காவின் பொருளாதாரம் உலகின் வேறு எந்த நாடும் நெருங்கவே முடியாத தூரத்தில் இருக்கிறது. தனிநபர் வருமானம் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் இருக்கிறது. அமெரிக்கா முதலாளித்துவ கொள்கையை கடைபிடிக்கிறது. அதேநேரம் பணியாளர்களை ஊக்குவித்து, அவர்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது.

சீனாவின் கே விசா

இந்நிலையில் அமெரிக்கா திறன் மிகுந்த பணியாளர்களை புறக்கணிப்பதால், இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க, அதிக நிபந்தனைகள் இல்லாத, எளிதில் பெறக்கூடிய 'கே' விசாவை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது. புதிதாக கே விசாவை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்கிறது. இதற்கான கட்டணம் குறித்து இன்னும் சீன அரசு முடிவு செய்யவில்லை. இந்த விசாவைப் பெற சீன நிறுவனங்களின் உத்தரவாதம் தேவையில்லை என்றும் அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும் என்றும் கூறப்படுகிறது. நீண்டகாலம் சீனாவில் தங்கி பணியாற்றலாம் என்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் கே விசாவை எளிதாக பெறலாம் என்றும் சீனா அறிவித்துள்ளது.

இங்கிலாந்து திட்டம்

சீனாவை தொடர்ந்து இங்கிலாந்தும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட சர்வதேச திறமை பணிக்குழு அதற்கான பணிகளை வேகப்படுத்தி உள்ளது. சுமார் ரூ.640 கோடி நிதியுடன் உருவாக்கப்பட்ட இந்த குழுவினர், இந்தியர்கள் உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த உலகின் முன்னணி அறிவியல், தொழில்நுட்ப திறமையாளர்களை இங்கிலாந்துக்கு வரவழைப்பதற்கான திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படுகிறது.

உலகின் டாப் 5 பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள்

குறிப்பாக உலகின் முதல் 5 இடங்களில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், உயரிய விருது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இப்படி வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விசா கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட திட்டங்களும் இருப்பதாக இங்கிலாந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+