140 வார்த்தை கட்டுப்பாட்டை நீக்க டிவிட்டர் திட்டம்.. வருகிறது சூப்பர் டிவிட்
நியூயார்க்: டிவிட்டரில் உள்ள 140 வார்த்தைகள் என்ற கட்டுப்பாட்டை நீக்கி, பேஸ்புக் போல அதிக வார்த்தைகளில் கருத்துகளை வெளிப்படுத்தும் வசதியை டிவிட்டர் கொண்டுவரப்போகிறதாம்.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 1.4 பில்லியன் மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் டிவிட்டரில் 300 மில்லியன் பேர்தான் செயல்படுகின்றனர்.

எனவே பேஸ்புக்கிற்கு போட்டியாக டிவிட்டரை உருவாக்கும் வகையில் எழுத்துக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க டிவிட்டர் குழு யோசித்துவருவதாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நேரடி மெசேஜ் எனப்படும் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் பகிரும் வகையிலான மெசேஜ்களுக்கான எழுத்து கட்டுப்பாட்டை டிவிட்டர் நீக்கிவிட்டது. இப்போது, சூப்பர் டிவிட் என்ற பெயரில் கட்டுப்பாடற்ற எழுத்துக்களுடன் எண்ணங்களை பகிர செய்ய டிவிட்டர் முயற்சி செய்துவருகிறது. அதேநேரம் வழக்கமான டிவிட்டுகள் அதே 140 வார்த்தை கட்டுப்பாடுகளுடன் இருக்கும்.












Click it and Unblock the Notifications