திறமையான அட்மின்கள் கவனத்துக்கு.. டுவிட்டர் கணக்கை பராமரிக்க டுவிட்டருக்கே அட்மின் தேவை
சான் பிரான்சிஸ்கோ : டுவிட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை பராமரிக்க திறமையான ஒருவரை தேடி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டுவிட்டர் பராமரிப்பதற்கு நல்ல கதை சொல்ல தெரிந்தவர் தேவை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்னதான் பேஸ்புக் சமூக வலைதளங்களின் டான் ஆக இருந்தாலும் டுவிட்டர் தான் இன்றைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பெரும் புகழ்பெற்ற நட்சத்திரங்களின் இடது கையாக காணப்படுகிறது.
நம்மூர் அரசியல் தலைவர்களே தாங்கள் செல்லும் இடங்களில் சொல்லும் கருத்துக்களை மக்களிடம் வெளிப்படுத்தவும், தங்களது பிரச்சாரங்களுக்கும், பிரபலமான விஷயங்கள் பற்றி கருத்து சொல்வதற்கும் டுவிட்டரைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களால் எல்லா நேரமும் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட முடியாது என்பதால் அதற்காக அட்மினை நியமித்துள்ளார்கள்.

டுவிட்டர் இன் சீப்
திட்டத்தட்ட தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அரசியல் தலைவர்கள் அட்மின்களை நியமித்து தான் டுவிட்டர் கணக்கை பராமரித்து வருகிறார்கள்.அப்படி இருக்கையில் டுவிட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கை பாராமரிக்க திறமையான நிர்வாகியை தேடிவருகிறது. 'டுவிட்டர் இன் சீப்' என்ற பெயரில் வேலைக்கு ஆள் தேடிவருகிறது டுவிட்டர் நிறுவனம்.

டுவிட்டர் கலாச்சாரங்கள்
டுவிட்டரின் கலாச்சரங்களை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டுமாம்.இதேபோல் டுவிட்டரின் அட்மினாக அவருக்கு நன்றாக கதை சொல்ல தெரிந்து இருக்க வேண்டுமாம். டுவிட்டரின் தயாரிப்பு மாற்றங்கள் சிலவற்றையும் தேர்வு செய்யப்படும் நபர் பகிர வேண்டுமாம்.

சிறந்த உரையாடல்கள்
ஸ்டோரி எப்படி என்றால், "இந்த உலகில் நாம் சொல்வதற்கு என்று பல தனித்துவமான கதைகளை சொல்வோம். ஆனால் அத்துடன் மக்களுக்கு சிறந்த உரையாடல்களையும் மக்களுக்கு வழங்குவோம். நம்முடைய உரையாடல்களை பயன்படுத்தும் மக்களின் சிந்தைகளை உயர்த்த வேண்டும். என்ன மாதிரியான உணர்வுபூர்வ உரையாடல்கள் மக்களை நம்மோடு இணைக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலகம் என்ற மேடையை அவர் சிறியதாக உணர வேண்டும்" என டுவிட்டர் குறிப்பிட்டுள்ளது.

நிர்வாக பொறுப்புகள்
இந்த தகவலை தனது வேலைவாய்ப்பு பக்கத்தில் கூறியுள்ள டுவிட்டர் நிறுவனம், தேர்வு செய்யப்படும் நபர், நிறுவன எடிட்டோரியல் பிரிவின் அமைப்பின் கீழ் நிர்வாக பொறுப்புகளை கவனிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. தேர்வாகும் நபர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ அல்லது நியூயார்க் உள்பட ஏதேனும் ஒரு அலுவலகங்களில் பணியமர்த்தவுள்ளதாகவும் தனது அறிவிப்பில் டுவிட்டர் குறிப்பிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications