140 வார்த்தையில் புரட்சிகளை நிகழ்த்தி காட்டிய 10 வயது பாலகன் டிவிட்டர்! வாருங்கள் வாழ்த்தலாம்
வாஷிங்டன்: சமூக வலைத்தளமான டிவிட்டர் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு 10 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இதை டிவிட்டரிலேயே நெட்டிசன்கள் ஹேஷ்டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.
ஜேக் டோர்சே என்பவரால், 10 வருடங்கள் முன்பு உருவாக்கப்பட்டது டிவிட்டர் எனும் சமூக வலைத்தளம். "just setting up my twttr" என்பதே அவரது முதல் டிவிட்டாக இருந்தது.
ஆனால் இன்று, உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் டிவிட்டரை பயன்படுத்தி பல கோடி டிவிட்டுகளை தட்டி விட்டு அதை மாபெரும் வெற்றி படைப்பாக உருமாற்றியுள்ளனர்.

அப்டேட்
உலகின் எந்த மூலையில் நடைபெறும் நிகழ்வாக இருந்தாலும், பிற மக்களை நேரடி தொடர்பில் வைத்திருக்க டிவிட்டர் உதவுவது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக சமூக வலைத்தளவாசிகளால் சிலாகிக்கப்படுகிறது.

எக்ஸ்ட்ரா ஷீட் இல்லை
பேஸ்புக், இ-மெயில் போன்ற கருத்து பரிமாற்ற தளங்களில், இஷ்டத்துக்கு பல பத்திகளை எழுதி குவிக்கலாம். எக்ஸாசில் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி எழுதுவோருக்குத்தான் அது சரியாக வரும். அவ்வளவு பெரிதாக எழுதினால் யாராவது படிப்பார்களா என்ற பிரக்ஞை இன்றி, எழுதி தள்ளுவர் சிலர்.

திருக்குறள் போன்றது
இப்படிப்பட்ட நிலையில், 140 வார்த்தைகளுக்குள் சொல்ல வந்ததை சுருங்க சொல்ல வைத்த பெருமை டிவிட்டரை சாரும். 2 வரியில் வாழ்க்கை பாடம் நடத்திய திருக்குறளின் லேட்டஸ்ட் வெர்சன்தான் டிவிட்டர் என்றாலும் அது மிகையான சொல் கிடையாது.

புரட்சிகள்
தத்துவம், காதல், வாழ்க்கை, அறம், போராட்டம், அரசியல் மாற்றம் என பலவற்றுக்கும் வெறும் 140 வார்த்தைகள் பதிவிட வகை செய்யும் டிவிட்டர் உதவியுள்ளது என்பது சம கால வரலாறு.

இந்தியாவில் அரசியல் புரட்சி
இந்தியாவில் கூட நரேந்திர மோடி, அரவிந்த் கேஜ்ரிவால் என அரசியலில் திடீர் மாற்றத்திற்கு வித்திட்டவர்களுக்கு விதையாக இருந்தது டிவிட்டர் என்பது கண்கூடு. சூப்பர் ஸ்டார் முதல் உலக நாயகன் வரை டிவிட்டரை தேடி ஓடிவர இந்த தாக்கம்தான் காரணம்.

10 வயசு பையன்
அப்படிப்பட்ட டிவிட்டருக்கு இன்று 10 வயதாகியுள்ளது. இந்த 10 வயது பாலகன் உலக அரசியலிலும், தத்துவத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் உண்மையிலேயே வியப்புக்குறியதுதான். டிவிட்டரில் #LoveTwitter என்ற ஹேஷ்டேக் பெயரில் தங்களின் டிவிட்டர் பயன்பாட்டு அனுபவங்களை உலகமெங்கும் உள்ள நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள். நீங்களும் ஒரு டிவிட் போட்டுவிட்டு வாங்களேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications