அம்மாடியோவ்.. என்ன ஒரு அழகு! மயிலின் செயலால் அசந்து போன நெட்டிசன்கள்.. என்ன நடந்தது?
ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தை சேர்ந்த மயிலின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
பறவை இனங்களில் மிக அழகானது மயில் என்றால் அது மிகை அல்ல. அதுவும் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடும் அழகை பார்ப்பதற்கு காணக்கண்கோடி வேண்டும்.
அப்படி ஒரு கொள்ளை அழகை கொண்ட மயில், வானில் கரு மேகங்கள் சூழ்ந்த தட்பவெப்ப நிலையில், பெண் மயிலை கவர்வதற்காக தனது அழகான தோகையை விரித்து ஆடுவது பார்ப்பவர்களை 'வாவ்' போட வைக்கும்.

5 லட்சம் லைக்குகள்
இப்படி காண்போரை கவரும் மயில் தனது தோகையை விரித்து ஆடும் கண்கொள்ளாக் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பறவைகள் குறித்து பதிவிடும் டுவிட்டர் பக்கம் ஒன்று இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.
பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ காட்சி பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. சுமார் 13.8 மில்லியன் பார்வையாளர்களையும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான ரீ-டுவிட்களையும் பெற்றுள்ளது.

கனவா? இல்லை நிஜம்தானா?
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில், மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடுகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், மயில் தோகையை விரித்து ஆடும் அழகை பார்த்து ரசித்ததோடு மட்டுமின்றி, லைக்குகளையும், கருத்துக்களையும் அள்ளி வீசியுள்ளனர்.
சிலர் கேலியாகவும் கருத்துக்களை கூற மறக்கவில்லை. நெட்டிசன் ஒருவர் கூறும்போது, 'இதை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு' எனத்தெரிவித்துள்ளார். மற்றொருவர் கூறுகையில், இது கனவா? இல்லை நிஜம்தானா? என்று பொருள்படும் வகையில் நான் தூக்கத்திலிருந்து எழுந்து எனது தலைமுடியை அசைத்து பார்க்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்களின் கருத்து
ஸ்காட்லாந்தில் வெள்ளை நிற மயில் இருப்பதாகவும் அதுவும் இதே போன்று காண்போரை கொள்ளைச் கொள்ள செய்யும் அழகைக் கொண்டது என மற்றொரு நெட்டிசன் கூறி விவாதத்தை திருப்பிவிட்டார்.
இதற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர், ஒரு மாதத்திற்கு முன்பாக புல்வெளி ஒன்றில் சுற்றித்திரிந்த வெள்ளை நிற மயில் ஒன்றின் வீடியோ காட்சி யூ-டியூப்பில் டிரெண்ட் ஆனதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக பலரும் மயிலின் அழகை வர்ணித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வெள்ளை நிற மயில்கள்
இத்தாலியின் ஸ்ட்ரெசாவிற்கு அருகிலுள்ள மாகியோர் ஏரியில் உள்ள குட்டி சொர்க்கம் என்று சொல்லப்படும் போரோமியன் தீவில் உள்ள தோட்டங்களில் வெள்ளை நிற மயில்கள் அதிக அளவில் உள்ளன. இந்த தோட்டத்தில் நம்ம ஊரில் காணப்படும் மயில்களும் உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications