பிரஸ்ஸல்ஸ் ஏர்போர்ட்டை தாக்கியது போலீசாருக்கு தெரிந்த 2 குற்றவாளி சகோதரர்கள் தான்!
பிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய இருவர் எல் பக்ராவுய் சகோதரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 8 மணிக்கு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 34 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் விமான நிலையித்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்ற அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள் பக்ராவுய் எல் காலித் மற்றும் இப்ராஹிம் எல் பக்ராவுய் என்ற சகோதரர்கள்.

அவர்கள் திட்டமிட்டு குற்றங்கள் செய்து வந்தது தான் போலீசாருக்கு தெரியும். ஆனால் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தற்போது தான் தெரிந்துள்ளது.
அவர்களுக்கும் பாரீஸ் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான சாலா அப்துஸ்ஸலாமுக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்துஸ்ஸலாம் கடந்த வெள்ளிக்கிழமை பிரஸ்ஸல்ஸில் கைது செய்யப்பட்டார்.
விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரஸ்ஸல்ஸ் தாக்குதலில் பல அமெரிக்கர்கள் மாயமாகியுள்ளனர். அவர்கள் பற்றிய விபரம் தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகிறார்கள்.
ஜெட் ஏர்வேஸ்:
பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய தாக்குதலில் காயம் அடைந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய தாக்குதல்களில் காயம் அடைந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க பிரஸ்ஸல்ஸில் உள்ள எங்கள் ஊழியர்கள் அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுகிறார்கள்.
காயம் அடைந்த இரண்டு பேரை சந்திக்க அவர்களின் குடும்பத்தார் பிரஸ்ஸல்ஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸில் நிலவும் சூழலை ஜெட் ஏர்வேஸ் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மும்பை மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள எங்களின் அவசரகால மையங்கள் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ்:
தெற்கு பிரான்ஸில் உள்ள டூலூஸ் பிளாக்னக் விமான நிலையம் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 6.45 மணிக்கு மூடப்பட்டது. விமானங்களில் இருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் காலை 11 மணிக்கு விமான நிலையம் திறக்கப்பட்டது.
விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த பையால் தான் விமான நிலையம் மூடப்பட்டது என்று கூறப்பட்டது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications