இரண்டு ஆண் எலிகளை கொண்டு இனப்பெருக்கம்.. சீனா செய்த புதிய சாதனை! அறிவியல் துறையில் புது மாற்றம்
பெய்ஜிங்: இரண்டு ஆண் எலிகளை கொண்டு புதியதாக ஒரு எலி குட்டியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர். இதற்கு முன்னர் இதை பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் முயன்று பார்த்திருக்கிறார்கள். ஆனால், குட்டிகள் உருவாக்கப்பட்டாலும் அது ஆரோக்கியமாக இல்லை. சீன விஞ்ஞானிகள், ஆரோக்கியமான குட்டிகளை உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றனர்.
இந்த ஆய்வானது "புரொசீடிங்க்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்" (PNAS) என்ற அறிவியல் இதழில் ஜூன் 23, 2025 அன்று வெளியாகியுள்ளது. ஷாங்காய் ஜியா டோங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த சாதனையை செய்து காட்டியிருக்கிறார்கள்.

அதாவது குழந்தை பிறக்க, ஆண் விந்தணுவின் பாதி மரபணுக்களும், ஒரு பெண் முட்டையின் பாதி மரபணுக்களும் சேர வேண்டும். இந்த முட்டை மற்றும் விந்தணுவில் உள்ள மரபணுக்கள் "ஆன்" அல்லது "ஆஃப்" செய்யப்பட்டிருக்கும். அம்மாவிடம் இருந்து வரும் சில மரபணுக்கள் "ஆன்" ஆகவும், அப்பாவிடம் இருந்து வரும் சில மரபணுக்கள் "ஆன்" ஆகவும் இருக்க வேண்டும். இது இயற்கையான விதி.
ஆனால், இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் ஆண் எலியின் உடம்பில் இருந்து விந்தணுவை எடுக்காமல், தோல் செல் போன்ற சாதாரண செல்லை எடுத்திருக்கிறார்கள். இந்த சாதாரண ஆண் செல்லுக்கு, இயல்பாக ஒரு "ஆண்" தன்மை இருக்கும்.
விஞ்ஞானிகள், சிறப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த சாதாரண ஆண் செல்லின் மரபணுக்களை "ரீ-புரோகிராம்" செய்திருக்கிறார்கள். அதாவது, ஒரு முட்டை செல்லில் இருப்பது போல.. சில மரபணுக்களை "ஆன்" செய்தும் அல்லது "ஆஃப்" செய்தும், அதன் செயல்பாட்டை மாற்றியிருக்கிறார்கள். இதை செய்யும் சிறப்பு தொழில்நுட்பத்திற்கு பெயர்தான் "எபிஜெனெடிக் புரோகிராமிங்".
இந்த மாற்றப்பட்ட ஆண் செல், இப்போது ஒரு "முட்டை" போன்ற பங்கைச் செய்ய தயாராக உள்ளது. இறுதியாக, இந்த "மாற்றப்பட்ட ஆண் செல்லை", இன்னொரு ஆண் எலியின் விந்தணுவோடு சேர்த்து, புதிய குட்டி எலிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
என்னதான் இரண்டு ஆண் எலியை பயன்படுத்தி குட்டியை வரவழைத்திருந்தாலும், மனிதர்களிடம் இந்த நடைமுறை ஒத்துவராது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, மனித குழந்தை வேண்டும் எனில் நிச்சயம் ஒரு ஆணும், பெண்ணும் சேர வேண்டும். இங்கிலாந்தில் உள்ள செயின்ஸ்பரி வெல்கம் சென்டரை சேர்ந்த கிறிஸ்டோஃப் கலிகெட் கூறுகையில்,
"இரண்டு ஆண் எலிகளை கொண்டு எலி குட்டிகளை உருவாக்கும் இந்த ஆராய்ச்சி நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான முட்டைகள் தேவை, அதிக எண்ணிக்கையிலான வாடகைத் தாய்மார்கள் தேவை மற்றும் குறைந்த வெற்றி விகிதம் காரணமாக இதை மனிதர்களுக்கு பரிசோதித்து பார்க்க முடியாது" என்று கூறியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications