ஜெத்தாவில் திடீர் என கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளம்: 2 பேர் பலி
ஜெத்தா: ஜெத்தாவில் திடீர் என்று கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 பேர் பலியாகியுள்ளனர், 2 குழந்தைகள் மாயம் ஆகியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் செவ்வாய்க்கிழமை திடீர் என்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் சாலைகளில் வெள்ளநீர் ஆறாக ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மக்கா அருகே உள்ள இடத்தில் வெள்ளநீர் அதிக அளவில் ஓடியதால் 16 பேர் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர்.

குறுகிய நேரத்தில் 22 செ.மீ. மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தின்போது சாலையை கடக்கையில் மின் கம்பத்தை தொட்ட 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர், மேலும் 2 குழந்தைகள் மாயமாகியுள்ளனர். குழந்தைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் கெய்ரோவில் இருந்து ஜெத்தா வந்த எகிப்து விமானம் ஒன்று அண்மையில் திறக்கப்பட்ட மதினா நகர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. நேற்றைய வெள்ளம் ஜெத்தா மக்களுக்கு 2009ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுபடுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications