இரவோடு இரவாக தாக்கிய டிரோன்கள்.. சவுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்! பதற்றம்
ரியாத்: மத்திய கிழக்கில் இப்போது வரலாறு காணாத பதற்றம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு பிராந்திய போர் வெடிக்கும் சூழலே அங்கு நிலவுகிறது. இதற்கிடையே இப்போது சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 4வது நாளாகத் தொடர்கிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. கமேனி கொல்லப்பட்ட போதிலும், ஈரானின் மற்ற தலைவர்களைக் குறிவைத்து அமெரிக்கா- இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானும் அதற்குக் கடுமையான பதிலடிகளைக் கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேலைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல மற்றொரு பக்கம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் அமெரிக்க தூதர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்துவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே இப்போது சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது கடும் வெடிச்சத்தம் கேட்டது. அங்கிருந்து கரும் புகை விண்ணில் எழுந்தது. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல்களைத் தொடங்கிய நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்கத் தூதரகத்தை டார்கெட் செய்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இரவு நேரத்தில் நடந்த இந்த தாக்குதல் தொடர்பான ஷாக் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதேநேரம் இந்த தாக்குதல் நடந்த போது அமெரிக்கத் தூதரகத்தில் யாரும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு யாரும் காயமடையவில்லை என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications