நியூசிலாந்து கார் விபத்து- 2 இந்தியர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி!
மெல்பர்ன்: நியூசிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான முரிவாய் கடற்கரை பகுதியில் நேற்று ஏற்பட்ட கார் விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட 4 பேர் பலியாகி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் தலைநகரான ஆக்லாண்டில் குயின்ஸ் அகடமி என்ற கல்வி நிறுவனத்தில் இந்தியரான தில்பிரித் என்பவர் பணியாற்றி வருகிறார். அவரது நண்பர்களான இமத் திப் என்ற லெபனான் நாட்டவரும், சையது ஜாப்ரி என்ற பாகிஸ்தானியரும் முறையே மார்க்கெட்டிங் பிரிவு அலுவலராகவும், ஒரு பேராசிரியராகவும் பணி புரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் புல்கித் மல்ஹோத்ரா என்ற இந்தியர் ஒருவர் தில்ப்ரீத்சிங் அழைப்பின் பேரில் நியூசிலாந்து சென்றிந்தார்.

இவர்கள் நால்வரும் இணைந்து நேற்று அந்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான மேற்கு ஆக்லாந்தில் உள்ள முரிவாய் கடற்கரையை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது திடீரென கட்டுபாட்டை இழந்த கார், சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து, உருண்டு கடலுக்குள் பாய்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அவசர உதவி குழு சம்பவ இடத்திற்கு உடனடியாக காரை நீரில் இருந்து வெளியே எடுத்தது. இந்த விபத்தில் புல்கித் மல்ஹோத்ரா மற்றும் தில்பிரித் சிங் உள்ளிட்ட நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டிவந்தது யார் என்பது தெரியவில்லை.
முரிவாய் கடற்கரையில் நடைபெறும் இரண்டாவது விபத்து இதுவாகும். கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இதே போன்றதொரு விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து நடைபெற்ற கடற்கரை சாலையில் கார் ஓட்டுவதற்கு ஆக்லாந்து நிர்வாகத்திடம் தனியாக உரிமம் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications