அமெரிக்காவில் பயங்கரம்..கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி
லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ்சில் உள்ள புகழ்பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
லாஸ் ஏஞ்சலஸ்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பொறியியல் துறை கட்டிடம் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அமெரிக்க நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது பற்றி லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையினருக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, பல்கலைக் கழக வளாகத்தை சுற்றிவளைத்த லாஸ் ஏஞ்சலஸ் போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர சோதனை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
போலீசாரின் தேடுதல் வேட்டையில் குண்டடிப்பட்ட நிலையில் இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்த இருவரில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவராக இருக்கக் கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து லாஸ் ஏஞ்சலஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து பல்கலைக் கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. அருகில் உள்ள பள்ளிக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இச்சம்பவத்தை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications