மாலி சொகுசு ரிசார்ட்டில் ஜிஹாதி தாக்குதல்: 2 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பமாகோ: மாலி தலைநகரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடத்தப்பட்ட ஜிஹாதி தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.

மாலி தலைநகர் பமாகோ அருகில் உள்ளது லி கேம்ப்மென்ட் கங்கபா என்னும் சொகுசு ரிசார்ட். வார இறுதி நாட்களில் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் இந்த ரிசார்ட்டுக்கு வருவார்கள்.

Two killed in suspected jihadi attack at Mali capital

இந்நிலையில் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய 4 பேர் ரிசார்ட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டவர்கள் இரண்டு பேர் பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்த மாலி சிறப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய 4 பேரை சுட்டுக் கொன்றனர். அதில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கபட்டது. மீதமுள்ள இருவரின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்த ஜிஹாதி தாக்குதல் சம்பவத்தில் பொது மக்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A luxury resort popular with Western expatriates outside Mali’s capital Bamako came under attack by gunmen on Sunday, the Security Ministry said. Two persons were killed in a suspected jihadi attack at the resort.
Please Wait while comments are loading...