2 பேருடன் ரகசிய குடித்தனம்... இரு காதலிகளும் சேர்ந்து டிரைவரை கழுத்தை நெரித்துக் கொன்றனர்!
ஷார்ஜா: ஷார்ஜாவில் ஒரே நேரத்தில் ரகசியமாக இரு பெண்களுடன் குடும்பம் நடத்திய டிரைவரை, சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவில் உள்ள ஒரு வீட்டில் ஆசியாவை சேர்ந்த ஒருவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். அதே வீட்டில் வேலை செய்து வந்த இரண்டு பெண்களுடன் ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருடன் பழகி வந்துள்ளார் அந்த டிரைவர்.
இந்நிலையில், ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு பெண்களும் மனம் திறந்து பேசியபோதுதான், இருவரும் அந்த டிரைவருடன் குடித்தனம் நடத்தி வருவது தெரிய வந்து அதிர்ந்தனர். அடப்பாவி இப்படி ஏமாற்றி விட்டாரே என்று ஆத்திரமடைந்தனர்.
தங்களை ஏமாற்றிய டிரைவரை பழி வாங்க முடிவு செய்தனர் அவர்கள். அதன்படி, சம்பவத்தன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த டிரைவரை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர், டிரைவரின் தலைக்கு அருகே பழைய மாத்திரைகளைப் போட்டு, அதை இயற்கையான மரணம் போன்று சித்தரித்து விட்டு, இரு பெண்களும் தலைமறைவாகினர்.
சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில் டிரைவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கொலையாளிகளான பெண்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் அப்பெண்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications