ஸ்மார்ட்போன், கணினிகளை தாக்கும் 2 வைரஸ்கள்.. எப்படி அழிப்பது.. குழப்பத்தில் தவிக்கும் கூகுள்!
ஸ்மார்ட்போன், கணினிகளை தாக்கும் வகையில் புதிய 2 வைரஸ்கள் உருவாகி இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: நிஜ உலகத்தில் வலம் வரும் வைரஸ்கள் போல விர்ச்சுவல் உலகத்திலும் நிறைய வைரஸ்கள் வலம் வருகிறது. செல்போன்களையும் கணினிகளையும் தாக்கி அளிக்கும் இந்த வகை வைரஸ்கள் மிகவும் ஆபத்தானது.
பெரிதாக என்ன செய்து விடும் என்று நினைத்துக் கொண்டு இருந்தால் அமைதியாக உள்ளே வந்து எல்லா தகவலையும் அப்படியே எடுத்துக் கொண்டு டாடா காட்டிவிடும். என்ன நடந்தது என்று கண்டுபிடிப்பதற்குள் எல்லாமே நடந்துவிடும்.
அந்த வகையில் ஸ்மார்ட்போன், கணினிகளை தாக்கும் வகையில் புதிய 2 வைரஸ்கள் உருவாகி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இந்த வைரஸ்களை எப்படி அழிப்பது என தெரியாமல் கூகுள் நிறுவனம் குழம்பிக் கொண்டு இருக்கிறது.

செல்போன் கணினி
இந்த வைரஸ்கள் செல்போன் மற்றும் கணினிகளை தாக்க கூடியது. முக்கியமா இன்டெல் ரக புரோசஸர்கள் கொண்டு கணினிகளை அதிகமாக தாக்க வழி இருக்கிறது. அதேபோல் புதிதாக வரும் ஆண்ட்ராய்ட் பிளாட்பாரம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தாக்கவும் வழி இருக்கிறது. அதேபோல் பலநாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் லேப்டாப்பைகளையும் இது அதிகமாக தாக்கும்.

ஸ்பெக்டர் வைரஸ்
ஆங்கில பட பெயரில் வந்து இருக்கும் இந்த ஸ்பெக்டர் வைரஸ்தான் முதல் நிலை வைரஸ் ஆகும். இதன் மூலம் நம்முடைய பாஸ்வேர்ட், புகைப்படங்கள் திருடப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இணையத்தில் ஏதாவது லிங்கை கிளிக் செய்யும் போது நமக்கே தெரியாமல் இந்த வைரஸ் சேவ் ஆகிவிடும். அதன்பின் தானாக எல்லா தகவல்களும் திருடப்படும்.

மெல்ட் டவுன்
இரண்டாவது வைரஸான மெல்ட் டவுன் மிகவும் மோசமான ரகம் என்று கூறப்பட்டு இருக்கிறது. இது சாப்ட்வேர் போல டவுன்லோட் ஆகி நம்முடைய கவனக்குறைவு காரணமாக இன்ஸ்டால் ஆகும். பின் இந்த சாப்ட்வேர் கணினியில் இருக்கும் ஹார்ட்வேர்களின் செயல்பாட்டை குறைக்கும். ஸ்மார்ட்போன்களிலும் இதே வகையில் இந்த வைரஸ் செயல்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

கூகுள் களம் இறங்கியது
இதற்கு எதிராக தீர்வு கண்டுபிடிக்க கூகுள் நிறுவனத்தின் தாய் கழகமான 'ஆல்பபெட்' களத்தில் இறங்கி இருக்கிறது .இதற்காக தற்போது கணினி மென்பொருளாளர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மற்ற வைரஸ்கள் போல இது செயல்படாத காரணத்தால் இதை எப்படி தடுப்பது என கூகுள் நிறுவனம் குழம்பி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இதற்கான சரியான ஆண்டி வைரஸ் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications