வாவ் டைவ்.. மலையிலிருந்து விமானத்திற்குள் குதித்த வீரர்கள்.. எல்லாம் டெக்னாலஜி வித்தைதான்!!
ஜெனிவாவில் உள்ள பெரிய மலை ஒன்றில் இருந்து பறந்து செல்லும் விமானம் மீது இரண்டு நபர்கள் குதித்து இருக்கிறார்கள்.
ஜெனிவா: ஜெனிவாவில் உள்ள பெரிய மலை ஒன்றில் இருந்து பறந்து செல்லும் விமானம் மீது இரண்டு நபர்கள் குதித்து இருக்கிறார்கள். அவர்கள் மலையில் இருந்து விமானத்தில் குதிக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
தற்போது இந்த வீடியோ இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. மேலும் அந்த இரண்டு நபர்களும் 10 நிமிடத்திற்கும் அதிகமாக வானத்தில் பறந்து விமானத்தில் குதித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சாதனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். சிறிய விமானத்தில் அவர்கள் குதிக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

விங் சூட் மன்னர்கள்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த 'பிரெட் புகேன்' மற்றும் 'வின்ஸ ரேபட்' என்ற இருவரும் பார்சூட்டில் இருந்து குதிப்பதில் வல்லவர்கள் ஆவார்கள். தற்போது புதிய டிரெண்ட் ஆகி இருக்கும் 'விங் சூட்' மூலம் மலைகளில் இருந்து குதிக்கும் சகாசத்திலும் இவர்கள் வல்லவர்கள். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் உயரமான மலைகளில் இருந்து கீழே குதிப்பதை இவர்கள் வாடிக்கையாகி வைத்துள்ளனர்.

குதிக்க முடிவு
இந்த நிலையில் இவர்கள் புதிய முயற்சியாக மலையில் இருந்து விமானத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி சிறிய விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அதில் குதிக்க திட்டமிட்டுள்னனர். இதற்காக ஜெனிவாவில் இருக்கும் முக்கியமான மலைகளில் ஒன்றான 'ஜங்ப்ராவ்' மலையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

புதிய கணக்கு
இந்த சாதனையை செய்வதற்காக அவர்கள் நிறைய கணக்குகளை செய்துள்ளனர். அங்கு அடிக்கும் காற்றின் வேகம், விமானத்தின் வேகம், அதில் குதிக்கும் இவர்களின் வேகம் என பலவற்றை சோதனை செய்துள்ளனர். மேலும் விமானத்தின் நீளத்தையும் தங்களது உயரத்தையும் கூட சரியாக கணக்கிட்டுள்ளனர். இதன் மூலம் எந்த புள்ளியில், எந்த கோணத்தில் குதித்தால் சரியாக விமானத்திற்குள் செல்ல முடியும் என்று கணித்துள்ளனர்.
சாதனை செய்தனர்
இந்த நிலையில் தற்போது அவர்கள் அந்த சாதனையை உண்மையாகவே செய்து முடித்துள்ளனர். உயரமான மலையில் இருந்து குதித்த அவர்கள் ஒருவர் பின் ஒருவராக விமானத்திற்கு அருகில் சென்றனர். ஒருவர் முதலில் லாவகமாக விமானத்தின் கதவிற்குள் சென்றார். அவரைப் போலவே அடுத்த நபரும் சரியாக விமானத்திற்குள் குதித்தார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது












Click it and Unblock the Notifications