ஆட்டம் காட்டும் "டோப்பு" கில்லாடிகள்... மெக்சிகோ டூ கலிபோர்னியா இடையிலான சுரங்கம் கண்டுபிடிப்பு!
கலிபோர்னியா: மெக்சிகோவுக்கு மட்டுமல்ல, அண்டை நாடான அமெரிக்காவுக்கும் கூட பெரும் தலைவலியாக இருப்பவர்கள் போதைப் பொருள் கடத்தல்காரர்கள். எனவேதான் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் ஊடுறுவும் மெக்சிகோ நாட்டவர்களிடம் அமெரிக்க அரசு மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருகிறது. அமெரிக்காவின் தீவிரக் கண்காணிப்பையும் மீறி ஆயிரக்கணக்கான மெக்சிகோ நாட்டவர் ஊடுறுவிய வண்ணம்தான் உள்ளனர்.
இந்த நிலையில் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்குப் போடப்பட்ட ரகசிய சுரங்கப் பாதைகளை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மொத்தம் 2 சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தலுக்காக இந்தப் பாதைகள் வெட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கலிபோர்னியா - மெக்சிகோ நாட்டு எல்லைப் பகுதியில் இந்த சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரு சுரங்கப் பாதையானது கலிபோர்னியா - மெக்சிகோ இடையே 230 அடி நீளத்திற்கு அமைந்துள்ளது. 4 அடி அகலத்தில் இது உள்ளது. இதில் விளக்குகளும் உள்ளன. ஜன்னல்களையும் வைத்துள்ளனர். மெக்சிகோவின் மெக்ஸிகலி நகரில் உள்ள ஒரு வீடு வரை இந்த சுரங்கப் பாதை செல்கிறது. கலிபோர்னியாவின் கெலக்ஸிகோ என்ற இடத்திலிருந்து இந்த சுரங்கப் பாதை ஆரம்பிக்கிறது.
இந்த சுரங்கப் பாதை வழியாக கலிபோர்னியாவுக்குள் புகுந்த நான்கு பேர் போதைப் பொருட்களை வெளியே கொண்டு வருவதைப் பார்த்து அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் இங்கு விரைந்து வந்தனர். அப்போது நடந்த சோதனையில்தான் இந்த சுரங்கப் பாதை விவகாரம் தெரிய வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஸ்கூபா டிரஸ்ஸும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 25 சீல் வைக்கப்பட்ட மெத்தமெபடமைன் போதைப் பொருளும் பறிமுதல் செயய்ப்பட்டது. இதன் மதிப்பு 7 லட்சம் டாலராகும்.
வந்த நால்வரில் இந்த ஒரு நபர் மட்டுமே சிக்கினார். மற்ற 3 பேரும் சுரங்கப் பாதை வழியாகவே மெக்சிகோவுக்குள் தப்பி ஓடி விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications