ஒளிரும் விளக்குடன் சென்றது ஏலியன்களின் பறக்கும் தட்டா?... மலைத்து போன அமெரிக்க பைலட்டுகள்!
இரண்டு அமெரிக்க பைலட்டுகள் அரிசோனா பகுதியில் மிதக்கும் தட்டு ஒன்று தங்களை கடந்து சென்றதை பார்த்துள்ளனர்.
Recommended Video

வாஷிங்டன் : இரண்டு வெவ்வேறு விமானங்களின் பைலட்டுகள் அரிசோனா பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று தங்களை கடந்து சென்றதை பார்த்துள்ளனர்.
அமெரிக்காவின் விமான நிர்வாகத்துறை இரண்டு பைலட்டுகளின் உரையாடலை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு பைலட்டுகள் தெற்கு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் மாகாண எல்லையை ஒட்டிய அரிசோனா பகுதியில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தங்களுக்கு மேலே வானத்தில் ஒரு மிதக்கும் பொருள் கடந்து சென்றுள்ளதை பார்த்துள்ளனர்.

விமான கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு விமானிகளின் உரையாடல்களை அமெரிக்காவின் விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முதலில் பீனிக்ஸ் ஏர் விமான பைலட் தான் ஒரு மிதக்கும் பொருளை பார்த்ததாக கூறி இருக்கிறார். இதனையடுத்து மற்றொரு விமானியிடம் உங்கள் கண்ணிற்கு ஏதேனும் தென்பட்டதா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த விமானி இல்லை என்று கூறி இருக்கிறார்.
இதனையடுத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானியிடம் இது குறித்து பீனிக்ஸ் விமான பைலட் கேட்டுள்ளார். அதற்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானி முதலில் இல்லை என்று கூறியவர் சற்று நேரத்தில் ஆம் என்னுடைய விமானத்திற்கு 2 அல்லது 3 ஆயிரம் அடி தூரத்தில் ஒரு வித்தியாசமான பொருள் பறந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இரண்டு விமானிகளுமே அந்த மிதக்கும் தட்டு தங்களது விமானத்தின் எதிர்திசையில் பறந்து சென்றதாக உரையாடலில் தெரிவிக்கின்றனர்.
இது ஏலியன்களின் பறக்கும் மிதவைத் தட்டா அல்லது வானிலை பலூன், ஏர்ஷிப் போன்ற ஏதாவது ஒன்றா என்ற சந்தேகம் எழுத்துள்ளது. எனினும் வானிலை கண்காணிக்கும் பலூன் போன்ற ஏதாவது ஒன்றாக இருந்தால் இவ்வளவு உயரத்தில் பறக்காது என்பதும் விமானிகளின் கருத்து, அந்த பறக்கும் தட்டில் இருந்த ஒளிரும் விளக்கு அந்தப் பொருள் என்ன என்பதை அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்ததாகவும் விமானிகள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications