71 வயது இந்தியருக்கு சரமாரி அடி.. 16, 18 வயதுடைய 2 அமெரிக்க இளைஞர்கள் கைது

கலிபோர்னியா மாகாணத்தில் 71 வயது இந்தியரை 2 இளைஞர்கள் தாக்கிய சம்பவம் வீடியோவில் பதிவாகி வைரலானது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    71 வயது இந்தியரை சரமாரியாக அடித்த அமெரிக்க இளைஞர்கள் கைது-வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 71 வயது இந்திய முதியவரை இரண்டு இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இளைஞர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரியின் மகன். இந்த சம்பவம் வீடியோவாக யூடியூபில் பரவியுள்ளது.

    Two US boys attack 71 year old Indian

    சாஹிப் சிங் என்ற அந்த முதியவர் கடந்த 6 தேதி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியே வந்த டியரோன் மெக் அலிஸ்டர் (18), சாஹிப் நட் (16) என்ற இளைஞர்கள் திடீரென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், சிறிது நேரத்தில் இருவரும் சேர்ந்து அந்த முதியவரை சரமாரியாக தாக்கினர்.

    இது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியானதை தொடர்ந்து போலீஸார் இதுகுறித்து விசாரித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட டியாரோன், காவல் துறை தலைமை அதிகாரி டேரில் மெக் அலிஸ்டரின் மகன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த காவல் அதிகாரி தனது முகநூல் பக்கத்தில் தனது மகனின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

    அதில் "இந்த நிகழ்வுக்கு நாங்கள் தலைகுனிந்து நிற்கிறோம், நாங்கள் அவனை இன வெறியோடோ, வன்முறையை பிரயோகிக்கவோ பழக்கவில்லை. இருப்பினும் சேர்க்கை சரி இல்லாத காரணத்தால் அவன் எங்களோடு இல்லாமல் பிரிந்து வாழ்கிறான். இந்த செய்தி கேள்விப்பட்ட உடன் அவனை பிடிக்க காவல் துறைக்கு உதவியதாக தெரிவித்திருந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+