டைப் 1 நீரிழிவு: ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக பாதிப்பு!
டைப் 1 நீரிழிவு நோயினால் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் 40 சதவிகிதம் பெண்கள் மரணமடையும் வாய்ப்பு அதிகம் என்றும் சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் வயதானவர்களிடம் மட்டுமே காணப்பட்ட சர்க்கரை நோய் (நீரிழிவு) இப்போது சிறுவர்களைக் கூட விட்டு வைக்காமல் பாதித்து வருகிறது.

சிறுவர்களுக்கு பாதிப்பு
டைப் 1 நீரிழிவு நோய் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதிக்கிறது. இந்தவகை பாதிப்பு உள்ளவர்களுக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பதில்லை.
உலக அளவில் பாதிப்பு
உலக அளவில் 15 வயதிற்குட்பட்ட 5,00,000 குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2013-ஆம் ஆண்டு சர்வதேச டயாபடீஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு மரணம்
இந்நிலையில், தற்போது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வின்படி முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களோடு ஒப்பிடும்போது நோயுற்று இறப்பதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கவாதம்
இந்நோயின் தாக்கத்தால் பக்கவாதம் வருவதற்கு 37 சதவீதமும் சிறுநீரக கோளாறுகளுக்கு 44 சதவீதமும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இதயநோய் வாய்ப்பு
மேலும் இதய நோயால் மரணிக்கும் வாய்ப்பு ஆண்களை விட பெண்களுக்கு இரண்டு மடங்கு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மோசமான ரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் இன்சுலின் சிகிச்சையில் உள்ள சிரமங்கள் போன்ற காரணிகளால், பல பெண்கள் இதய நோய் தொடர்பான மரணங்களை சந்திப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணிக்கும் பெண்கள்
சாதாரணமாக ஆண்களை விட வலிமையாக இருக்கும் பெண்களின் உடல் பாதுகாப்புத் தன்மையை முதல் வகை நீரிழிவு நோய் குலைத்து விடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications