இங்கிலாந்துக்காக ‘ஹோவர் பைக்’ தயாரிக்கும் அமெரிக்க ராணுவம்!
லண்டன்: நீண்ட காலமாகவே கனவாக இருந்து வரும் ஹோவர் பைக் இதோ ரெடியாகப் போகிறது. இதற்காக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசுகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அமெரிக்க ராணுவம், இந்த ஹோவர் பைக்கை இங்கிலாந்துக்காக செய்து தரவுள்ளது.
இந்த ஹோவர் பைக்கை இங்கிலாந்தின் மல்லாய் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் சர்வைஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும். அமெரிக்காவின் சர்வைஸ், கடந்த 30 வருடமாக ராணுவ தளவாடங்களத் தயாரித்து வரும் நிறுவனமாகும்.
அமெரிக்காவின் மேரிலேன்ட் மாகாணத்தில் இந்த பணிகள் தொடங்கவுள்ளன.

பாதுகாப்பானது...
இதுகுறித்து மல்லாய் நிறுவன விற்பனை இயக்குநர் கிராண்ட் ஸ்டாப்ளடன் கூறுகையில், ‘வழக்கமான ஹெலிகாப்டரை விட ஹோவர்பைக்கில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக பாதுகாப்பு மிக மிக அதிகம்.

பிரச்சினை இல்லை...
மக்களின் பாதுகாப்பு இதில் உறுதி செய்யப்படுகிறது. மேலும் இறங்கும் இடம் குறித்த பிரச்சினையும் கிடையாது.

செலவு குறைவு...
ஹெலிகாப்டரை விட செலவும் குறைவு. மேலும் அதை செயல்படுத்துவதும் எளிமையானது' என்கிறார் அவர்.

மீதமுள்ள பணிகள்...
இந்த ஹோவர் பைக்கின் மூன்றில் ஒரு பங்கு பணிகள் ஏற்கனவே இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் முடிவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகள் தான் தற்போது அமெரிக்காவில் தொடரவுள்ளது.

2 பேர் அமரலாம்...
முதலில் இது ஆளில்லாத விமானம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது 2 பேர் பணிக்கும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது .

எளிதானது...
இந்த ஹோவர் பைக்கில் ஒரு கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஹோவர் பைக்கை வெகு எளிதாக ஒரு இடத்திலிரு்நது இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும். இதை மடக்கி எடுத்துச் செல்ல முடியும். கப்பல், விமானத்தில் கூட இதை வைத்துக் கொண்டு செல்ல முடியும் என்பது விசேஷமானது.

அவசர காலத்தில்...
தேவைப்படும் இடத்தில் இதைப் பொருத்தி பயன்படுத்தலாம். மீட்பு மற்றும் தேடுதல் பணியில் இது பெரும் உதவியாக இருக்கும். அவசர காலத்திதல் இதை வெகுவாக பயன்படுத்த முடியும்.

ஹோவர் கிராப்ட்டுகள்...
ஏற்கனவே ஹோவர் கிராப்ட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவை நீரிலும், நிலத்திலும், சேற்றுப் பகுதியிலும், மணல் பரப்பிலும் படு சாதாரணமாக செல்லக் கூடியதாகும். பல நாடுகளில் கடற்படையினரும், கடலோரக் காவல் படையினரும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இதே வரிசையில் ஹோவர் பைக்கும் விரைவில் சேரும் என்று நம்பலாம்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications