சூட்கேஸ் கொலை: யு.எஸ். ஜோடிக்கு சிறை தண்டனை விதித்த இந்தோனேசிய கோர்ட்
பாலி: இந்தோனேசியாவில் தனது காதலியின் தாயை கொலை செய்த அமெரிக்கருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைச் சேர்ந்தவர் ஷீலா வான் வீஸ் மேக்(62). பணக்காரரான அவரின் மகள் ஹீதர் மேக்கை(19) டாமி ஷேபர் என்பவர் காதலித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் அவர்கள் 3 பேரும் இந்தோனேசியாவுக்கு வந்தனர்.
பாலியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஷீலாவுக்கு தனது மகள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வந்து கோபம் அடைந்தார். இது குறித்து அவருக்கும் டாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டாமி ஷீலாவை அடித்துக் கொலை செய்தார்.

இதையடுத்து டாமியும், ஹீதரும் சேர்ந்து ஷீலாவின் உடலை சூட்கேஸில் வைத்து டாக்ஸியில் எடுத்துச் சென்றனர். டாக்ஸியில் இருந்த பெட்டியை அவர்கள் எடுக்காமல் சென்றதால் இது குறித்து டிரைவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது ஷீலாவின் பிரேதம் இருந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹீதர் மற்றும் டாமியை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு இந்தோனேசியாவில் நடந்து வந்தது. இதற்கிடையே கர்ப்பிணியான ஹீதர் அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாமிக்கு(21) 18 ஆண்டுகளும், ஹீதருக்கு 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications