ஈராக் அதிபர் மாலிக்கை விரட்டிவிட்டு புதிய அரசை அமைக்க முயற்சிக்கிறது அமெரிக்கா!
வாஷிங்டன்: ஈராக்கில் அதிபர் மாலிக்கை அகற்றிவிட்டு புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஆயுதம் தாங்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். படை உள்நாட்டு போரை நடத்தி வருகிறது. ஈராக்கின் பெரும்பான்மையான நகரங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வசமாகிவிட்டன.
ஆளும் ஈராக் அரசோ அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவோ ஏதோ ஒரு சில காரணங்களுக்காக இறுதி முடிவெடுக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஈராக்கில் தற்போதைய மாலிக் அரசை நீக்கிவிட்டு ஷியா, சன்னி, குர்து இன மக்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக் விவகாரத்தில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தரப்புக்கு சவூதி அரேபியாவும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு ஈரானும் ஆதரவாக இருக்கின்றன. இந்த நாடுகளின் ஆதரவுடன் ஈராக்கில் ஒரு பொம்மை அரசு அமைவது அப்பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்துவதற்கு வாய்ப்பாக அமெரிக்கா கருதுகிறது.
இதனால்தான் உடனடியாக சன்னி பிரிவு முஸ்லிம்கள் குழு மீது தாக்குதல் நடத்தாமல் மாலிக்கை நீக்கிவிட்டு புதிய அரசை அமைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications