உலகை ஆளப்போகும் UAE.. OPEC அமைப்பில் இருந்து திட்டமிட்டு வெளியேற இதுதான் காரணம்?
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) OPEC மற்றும் OPEC+ அமைப்புகளிலிருந்து வெளியேறுவதாக, சவுதியில் இன்று மாலை துவங்கிய முக்கியமான GCC கூட்டத்தில் அதிரடியாக அறிவித்துள்ளது. மே 1ஆம் தேதி முதல் இவ்விரு அமைப்புகளில் இருந்தும் மொத்தமாக வெளியேற்றுவது அமலுக்கு வரும் என்று அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் WAM தெரிவித்துள்ளது.
இந்த முடிவு உலக எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான OPEC-க்கும் அதன் விரிவான OPEC+ கூட்டமைப்புக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக OPEC அமைப்பின் தலைவராகக் கருதப்படும் சவுதி அரேபியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

எதிர்கால திட்டம்
UAE அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, OPEC மற்றும் OPEC+ இரண்டிலிருந்தும் முழுமையாக வெளியேறும் முடிவு UAE-வின் நீண்டகால உத்தி மற்றும் பொருளாதாரத் திட்டங்களுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு என்று WAM செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த முடிவின் வாயிலாக ஐக்கிய அரபு அமீரகம் இனி பெருமளவு முதலீடு செய்து உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகப்படுத்தி, எதிர்கால உலக எரிசக்தி சந்தையின் தேவைகளை முன்கூட்டியே புரிந்துகொண்டு செயல்படும் பொறுப்புணர்வு மிக்க உற்பத்தியாளராக UAE தன்னை நிலைநாட்ட விரும்புகிறது.
தேசிய நலன்கள் மற்றும் புவியியல் பதற்றம்
UAE-வின் இந்த முடிவு தேசிய நலன்களை முன்னிறுத்தியே எடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா பகுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தொடர் இடையூறுகள் எண்ணெய் விநியோகத்தை பாதித்துள்ளன. இந்த போர் பதற்றங்கள் மத்தியில் உடனடியாக சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்ய UAE களமிறங்கியுள்ளது.
UAE: உலக எரிசக்தி சந்தையில் ஆதிக்கம்
OPEC மற்றும் OPEC+ அமைப்பில் இருந்து வெளியேறியதன் மூலம் UAE தன் எரிசக்தி துறையை வலுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இது UAE-வின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி இலக்குகளை எளிதாக எட்ட முடியும். இந்த உத்தி UAE-வை உலக எரிசக்தி அரசியலில் முக்கிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைய உள்ளது.

ஈரான் போர் மற்றும் உலகப் பொருளாதாரம்
தற்போது ஈரான் தொடர்பான போர் பதற்றம் உலக அளவில் எண்ணெய் சப்ளை செயினை பெரிதும் பாதித்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் UAE-வின் முடிவு உலகப் பொருளாதாரத்திற்கு கூடுதலான சவால்களை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், UAE தனிப்பட்ட வழியில் செல்ல முடிவு செய்துள்ளது, இதனால் மற்ற வளைகுடா நாடுகளின் நட்பை இழக்க நேரிடும். இது எண்ணெய் சந்தையில் புதிய சமன்பாட்டை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications