கடகடவென டிரஸ்ஸை கழற்றி.. டிரைவரின் ஆபாசம்.. சுதாரித்த பெண் பயணி.. அப்சல் இப்போ ஜெயிலில்!
பாலியல் தொல்லை தந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்
லண்டன்: கால் டாக்சி ஓட்டிச் சென்ற டிரைவர் அப்சல் கடகடவென டிரஸ்ஸை கழட்டிவிட்டார்.. பிறகு தன்னுடைய அந்தரங்க உறுப்பை தொடுமாறு காரில் உட்கார்ந்திருந்த இளம் பெண்ணை வற்புறுத்தவும் ஆரம்பித்துவிட்டார்.. ஆனால், செம ஐடியா பண்ணி அப்சலை தூக்கி உள்ளே வைத்துவிட்டார் அந்த இளம்பெண்!
லண்டனை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கும்.. தன் வீட்டிற்கு போவதற்காக ஊபர் கால் டாக்சியை புக் செய்திருக்கிறார்.. அதன்படி நதீம் அப்சல் என்ற டிரைவர் கார் எடுத்து கொண்டு வந்தார்.. இவர் ஒரு பாகிஸ்தானியர் என்று கூறப்படுகிறது.
காரில் அந்த பெண் ஏறி உட்கார்ந்து கொண்டார்.. ஆனால், சென்று கொண்டிருந்த கார், கொஞ்ச நேரத்திலேயே ரூட்டை மாற்றி சென்றது.. போக வேண்டிய ரூட்டில் போகாமல், வேறு திசையில் வண்டியை ஓட்டினார் டிரைவர். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து ஏன் இந்த வழியில் போறீங்க என்று கேட்டுள்ளார்.. அதற்கு அப்சல், இது ஷாட் கட் ரூட்.. சீக்கிரமா போய்டலாம் என்று சொல்லி உள்ளார்.

டிரஸ்
இப்படி சொல்லிய கொஞ்ச நேரத்திலேயே தனது டிரஸ்ஸை கடகடவென அவிழ்த்துவிட்டார் அப்சல்.. பிறகு தனது அந்தரங்க உறுப்பை தொடுமாறு அந்த பெண்ணிடம் சொன்னார்.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண்.. உடனே மறுத்துள்ளார்.. ஆனாலும் அப்சல் விடுவது மாதிரி தெரியவில்லை. அதனால் டிரைவரிடம் இருந்து சாமர்த்தியமாகதான் தப்பிக்க வேண்டும் என்று அந்த பெண் முடிவு செய்தார்.

செல்போன்
அதற்காக தன் மொபைல் போனை நைசாக ஆன் செய்து விட்டார்.. அப்சல் கேட்டதும், அதற்கு பெண் மறுப்பு சொன்னதும், அத்தனையும் போனில் ரெக்கார்ட் ஆகிகொண்டே இருந்தது.. இதெல்லாம் தெரியாமல் அப்சல், தான் என்ன கேட்டாரோ அதிலேயே பிடிவாதமாக இருந்து வண்டியை ஓட்டிக் கொண்டே வந்தார்.. இந்த சமயத்தில் பெண், போலீசுக்கு தகவல் சொல்லி, தன் வீட்டு அட்ரஸையும் சொல்லிவிட்டார்.

கைது
40 நிமிஷத்தில் வந்து சேர வேண்டிய கார்.. நீண்ட நேரம் கழித்துதான் வந்தது.. கடைசியில் அப்சல் பெண்ணின் வீட்டு பக்கத்தில் இறக்கிவிட்டார். அதற்குள் அங்கு போலீசார் ரெடியாக நின்றிருந்தார்கள்.. அவர்களிடம் இளம்பெண் செல்போன ரிக்கார்டை கொடுக்க.. அப்சலை கைது செய்தனர் போலீஸார்.

ஜெயில்
ஒரு நிமிஷம் எதுவுமே புரியாமல் அப்சல் பேந்த பேந்த விழித்தார்.. இறுதியில் அவர் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ளது.. எப்படியும் ஒரு வருஷம் ஜெயில் என்கிறார்கள்.. ஒரு வருஷம் கழிச்சு வந்தாலும் கால் டாக்சி ஓட்டுவதும் இனி அப்சலுக்கு கஷ்டம்தான்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications