ராணுவ தளத்தின் மேல் ஒரு ரவுண்டு! கலர் மாறி ஏரியில் மூழ்கிய "அயலான்!" அடுத்த நொடி பறந்ததால் பகீர்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குச் சொந்தமான ராணுவ தளம் ஒன்றின் மீது பறக்கும் தட்டுக்கள் பறக்கும் வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இது இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
நமது உலகில் பூமியைத் தவிர வேறு பல கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே பிரபஞ்சத்தில் உள்ள மாற்றுக் கிரகங்கள் குறித்த ஆய்வுகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக அமெரிக்காவின் நாசா இந்த ஆய்வுகளில் மிகச் சிறந்த இடத்தில் இருக்கிறது. வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என்ற ஆய்வு ஒரு பக்கம் என்றால் பூமிக்கு ஏலியன் வந்துள்ளதா என்ற ஆய்வு மற்றொரு பக்கம் நடந்து வருகிறது.
ஏலியன்கள்: அவ்வப்போது ஏலியன்கள் பூமிக்கு வந்த வீடியோ என்று இணையத்தில் பரவும். இதற்கிடையே இப்போது பகீர் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அமெரிக்க ராணுவ தளத்தின் மீது பறக்கும் தட்டுக்கள் பறப்பது போன்ற அந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை முதலில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜெர்மி கார்பெல் என்பவர் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தனர்.
அந்த பிளாக் அண்ட் ஒய்ட் வீடியோ ஈராக்கில் எடுக்கப்பட்டது போலத் தெரிகிறது. அதில் ஈராக்கில் உள்ள அந்த அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஜெல்லி மீன் போன்ற பொருள் பறப்பது தெளிவாகத் தெரிகிறது. இதை ஏலியன் விசிட் என்றே ஜெர்மி கார்பெல் உள்ளிட்ட பலரும் கூறுகின்றனர்.
மால் விசிட்: உலகெங்கும் சமீப காலங்களில் ஏலியன்கள் குறித்த பேச்சு மீண்டும் எழுந்துள்ள நிலையில், இந்த வீடியோ லீக் ஆகியுள்ளது. சமீபத்தில் தான் அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள மால் முன்பு 10 அடி உயரத்திற்கு ஏலியன் இருந்த வீடியோ இணையத்தில் பரவியது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இப்போது பரவும் புதிய வீடியோவில் அந்த மர்மமான ஜெல்லி பொருள் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்திற்கு மாறுவதும் தெளிவாக தெரிகிறது. அமெரிக்க ராணுவத்திடம் அதிநவீன வசதிகள் இருக்கும் நிலையில், அதில் எதிலும் தப்பாமல் இந்த பறக்கும் தட்டு உள்ளே நுழைந்துள்ளது. சைலெண்டாக நுழைந்த அந்த பறக்கும் தட்டு சுமார் 17 நிமிடங்கள் அந்த ஏரியில் மூழ்கி, அப்படியே கிடந்துள்ளது. அதன் பிறகு மீண்டும் அது ஏரியில் இருந்து வெளியே வந்து 45 டிகிரி கோணத்தில் அதிவேகமாக வானத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
பறக்கும் தட்டுகள்: இந்த பறக்கும் தட்டுகளைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்றும் அதனால் சைலெண்டாக நகர முடிந்தது மட்டுமின்றி நிறத்தை மாற்றும் திறனையும் அது கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பரவும் நிலையில், பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தரப்பினர் இந்த பறக்கும் தட்டுக்கள் உண்மை எனச் சொல்கிறார்கள்.. அதேநேரம் மற்றொரு தரப்பினர் இது போலியான வீடியோ என்கிறார்கள்.
பொதுவாக ஏலியன் விசிட் குறித்த வீடியோக்களில் எது உண்மை என்பதைக் கண்டறிவது சிரமம்.. இந்த வீடியோவிலும் கூட இது போலி வீடியோவா இல்லை உண்மையா என்பதைக் கண்டறிவதில் குழப்பம் தொடர்ந்தே வருவது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications