உலகத்திலேயே.. ரொம்ப... கேவலமான மியூசியம் இதுதாங்க!
பெய்ஜிங்: உலகத்திலேயே ரொம்பக் கேவலமான மியூசியம் இதுதான் என்று சீனாவில் உள்ள ஒரு மெழுகுச் சிலை மியூசியத்தைப் பார்த்து மக்கள் திட்டித் தீர்த்துக் கொண்டுள்ளனர்.
காரணம் அங்கு வைக்கப்பட்டுள்ள பிரபலங்களின் சிலையைப் பார்த்தால், தத்ரூபமாக இல்லை, படு கேவலமாக இருக்கிறது என்பதால்.
இப்படிப்பட்ட சிலைகளை வையுங்கள் என்று யார் அழுதார்கள் என பலரும் சகட்டுமேனிக்கு அந்த மியூசியத்தை விமர்சித்து வருகிறார்களாம்.

சிஷுவான் மியூசியம்
சீனாவின் சிஷுவான் மாகாணத்தில் இந்த மெழுகுச் சிலை மியூசியம் உள்ளது. அங்குள்ள சிலைகளைப் பார்த்தால் தலையே சுற்றி விடும்.

என்னய்யா இது
பல்வேறு பிரபலங்களுக்கு அங்கு சிலை வைத்துள்ளனர். அதைப் பார்த்தால் அந்தப் பிரபலங்கள் போலவே இல்லை. அதுதான் சர்ச்சைக்குக் காரணம்.

இவருதான் ஜாக்கி சானாம்
குறிப்பாக ஜாக்கி சான் சிலையை வைத்துள்ளனர். அதைப் பார்த்தால் செம டென்ஷனாகி விடும். ஜாக்கி சான் போல இருக்கிறது என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு குதறி எடுத்துள்ளனர்.

அடப்பாவிகளா.. இதுதான் பெடரரா
அதை விட கொடுமை ரோஜர் பெடரரின் சிலைதான். சிலையைப் பார்த்தால் பிபி ஏறி விடும் உங்களுக்கு. அப்படி கொம்பாக்க வைத்துள்ளனர் பெடரரின் உருவத்தை.

காங் லீயா இது
அதேபோல அழகுச் சிலை காங் லீயின் உருவத்தை சிதைத்து கொடூரமாக்கியுள்ளனர் சிலை என்ற பெயரில். காங் லீயின் பாட்டி போல இருக்கிறது அந்தச் சிலை.

இதுதான் ஸாங் ஜியி
அதேபோல ஸாங் ஜியி என்ற அழகியின் சிலையை மொட்டை அடித்தது போன்று உருவாக்கி வாந்தி வர வைத்துள்ளனர்.

ஓ மை காட்.. ஜெட்லீயின் சித்தப்பா போல இருக்காரே
அடுத்து ஜெட் லீ. இவரது உருவத்தை அப்படியே குண்டக்க மண்டக்க செதுக்கி அவரது சித்தப்பா போல மாற்றி விட்டனர்.
இன்னும் இதுபோல ஏகப்பட்ட பிரபலங்களை தாறுமாறாக சிலையாக்க வைத்து வருகிற, போகிறவர்களிடம் வாரிக் கட்டி வருகிறது அந்த மியூசியம்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications