"பிரிட்டனில் ஒரு தமிழ்நாடு.." கன்சர்வேடிவ் கட்சியை நிராகரித்த வேல்ஸ் மக்கள்! இந்த ஒற்றுமையை பாருங்க
பிரிட்டன்: பிரிட்டன் நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக வேல்ஸ் பகுதியில் போட்டியிட்ட அனைத்து 32 சீட்களையும் கன்சர்வேடிவ் கட்சி இழந்துள்ளது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
யுகே தேர்தலில் தொழிலாளர் கட்சி வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில் நாம் பிரிட்டனின் ஒரு பகுதியாக உள்ள வேல்ஸ் தேர்தல் முடிவுகளை நாம் குறிப்பிட்டுச் சொல்லியே தீர வேண்டும்.

யுகேவில் மொத்தம் 650 எம்பி சீட்கள் உள்ள நிலையில், அதில் வேல்ஸ் பகுதிக்கு மட்டும் 32 சீட்கள் உள்ளன. இதில் ஒரே ஒரு இடத்தில் கூட ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சியால் வெல்ல முடியவில்லை. வேல்ஸில் அனைத்து இடங்களையும் கன்சர்வேடிவ் கட்சி மொத்தமாக இழந்துள்ளது.
படுதோல்வி: கடந்த 2019இல் போரிஸ் ஜான்சன் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட கன்ரசர்வேடிவ் கட்சி 14 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. கடைசியாகக் கடந்த 1997ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் டோனி பிளேயர் பிரதமரான போது தான் கன்சர்வேடிவ் கட்சியால் வேல்ஸில் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. இப்போது மீண்டும் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கன்சர்வேடிவ் கட்சி வேல்ஸை மொத்தமாக இழந்துள்ளது.
அங்கு தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியது முதலே அனைத்து இடத்திலும் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி தான்.. இறுதியாக மொணமொயூத்ஷிரே தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், அங்கும் வேல்ஸ் மாநில பொறுப்பு அமைச்சரும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவருமான டேவிட் தோல்வி அடைந்தார்.
தமிழ்நாட்டைப் போலவே: அதாவது நமது நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெல்லவில்லையோ.. அதேபோல மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.. பிரிட்டனிலும் அதேபோல கன்சர்வேடிவ் கட்சியை இப்பகுதி மக்கள் மொத்தமாக நிராகரித்துள்ளனர். வேல்ஸ் மக்கள் இந்த முறை தொழிலாளர் கட்சிக்கே அதிக சீட்கள் கொடுத்துள்ளனர்.
அதாவது வேல்ஸ் பகுதியில் இப்போது மொத்தம் 32 சீட்கள் உள்ளன. அதில் 27 சீட்களை தொழிலாளர் கட்சியை வென்றுள்ளது. ஒரு இடத்தில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வென்றுள்ளது. அதேநேரம் மற்ற 4 சீட்களை பிளேட் சைம்ரு என்ற கட்சி வென்றுள்ளது. இது வேல்ஸ் பகுதியை அடிப்படையாகக் கொண்ட கட்சியாகும். இந்த கட்சியே வேல்ஸ் பகுதியில் இரண்டாவது முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஏன் முக்கியம்: யுகே தேர்தலில் வேல்ஸுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஏனென்றால் வேல்ஸ் நாட்டிற்கு எனத் தனித்துவமான கலாச்சார அடையாளம் இருக்கிறது. என்ன தான் பிரிட்டன் கீழ் வந்தாலும் வேல்ஸ் கலாச்சாரம் தனித்துவமானது. அங்குப் பேசும் மொழி கூட வேறு தான். என்ன தான் அங்கு பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் பேசுவார்கள் என்றாலும் அவர்களின் அதிகாரப்பூர்வ மொழி வெல்ஷ் ஆகும். இப்படி தனித்துவமான கலாச்சார அடையாளம் கொண்ட வெல்ஷ் மக்கள் கன்சர்வேடிவ் கட்சியை முழுமையாக நிராகரித்துள்ளனர்.
என்ன காரணம்: மேலும், யுகே கீழ் வந்தாலும் கூட வேல்ஸ் தங்கள் பிராந்தியத்திற்குத் தனி அரசையும் கொண்டுள்ளது. இதன் தலைமை பொறுப்பில் இருப்பவரை முதலமைச்சர் (First Minister of Wales) எனக் குறிப்பிடுகிறார்கள். இப்போது வேல்ஸில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், இரட்டை இன்ஜின் அரசு அமைந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை முன்னிறுத்தியும் தொழிலாளர் கட்சி பிரச்சாரம் செய்துள்ளது. வேல்ஸில் கன்சர்வேடிவ் கட்சி மொத்தமாகத் தோற்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
யுகே என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து என 4 பகுதிகளைக் கொண்டதாகும். இங்கிலாந்தில் அதிகபட்சமாக 543 இடங்கள் உள்ள நிலையில், ஸ்காட்லாந்தில் 57 இடங்களும், வேல்ஸில் 32 இடங்களும் வடக்கு அயர்லாந்தில் 18 இடங்களும் உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications