கீவ் வீதிகளில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.. உக்ரைனிற்கு சப்ரைஸ் விசிட்! பரபரக்கும் உலக நாடுகள்
கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்திற்குச் சென்றுள்ளார்.
கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் இன்னும் கூட முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வடக்கு உக்ரைன் பகுதிகளைக் குறி வைத்து ரஷ்யா ராணுவம் இன்னும் தனது தாக்குதலைத் தொடர்ந்தே வருகிறது.
இந்தப் போர் காரணமாக இரு தரப்பு ராணுவங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர்.

உக்ரைன் போர்
உக்ரைன் போரில் உலக நாடுகள் நேரடியாக ஈடுபடவில்லை. இருந்த போதிலும் இந்தப் போர் தொடங்கியது முதலே உலக நாடுகள் புதின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உக்ரைன் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் உலக நாடுகள் அறிவித்துள்ளன. இந்தப் பொருளாதாரத் தடைகள் ரஷ்யா பொருளாதார வளர்ச்சியை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

போரிஸ் ஜான்சன்
போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து, உக்ரைன் நாட்டிற்குப் பல உதவிகளை செய்து வரும் நாடுகளில் ஒன்று பிரிட்டன். இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று திடீரென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்ததாகத் தகவல் வெளியானது. ஜெலன்ஸ்கியை சந்திக்க போரிஸ் ஜான்சன் நேரடியாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குச் சென்றுள்ளார்.

ஜி7 நாடுகள்
உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ஜி7 நாடுகளின் சேர்ந்த தலைவர் ஒருவர் உக்ரைன் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உக்ரைன் பயணம் தொடர்பான தகவல்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.

கீவ் வீதிகள்
இது தொடர்பாகப் பிரிட்டன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "உக்ரைன் மக்களுடன் நாங்கள் என்றும் இருப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கப் பிரதமர் உக்ரைனுக்குச் சென்றுள்ளார்" என்றார். உக்ரைன் நாட்டில் இப்போது இருக்கும் நிலைமை குறித்து இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர், கீவ் வீதிகள் வழியாக இருவரும் நடந்து சென்றனர். அங்கு இருந்து மக்களுடன் போரிஸ் ஜான்சன் கலந்துரையாடினார்.

உதவிகள் தொடரும்
இந்த கூட்டத்திற்குப் பிறகு பேசிய போரிஸ் ஜான்சன், "உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உறுதியான தலைமை மற்றும் உக்ரேனிய மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்குத் தலை வணங்குகிறேன். ரஷ்யப் படைகள் உக்ரைன் வீரத்துடன் எதிர்கொள்கிறது. பிரிட்டன் அரசு உக்ரைன் மக்களுடன் நிற்கும் என்பதை இன்று தெளிவுபடுத்தினேன். பல காலமாகவே எங்கள் நிலைப்பாடு இதுவாகவே இருந்து வந்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கான ராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் தொடரும்.

சிங்கத்தின் கர்ஜனை
இந்த சோகத்தை முடிவுக்குக் கொண்டு வர உலகளாவிய கூட்டணியைக் கூட்ட முயல்கிறோம். மேலும் உக்ரைன் ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக இருக்க உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். உக்ரைன் நாட்டிற்கு £770 மில்லியன் பவுண்டுகள் உதவி செய்யப்படும் என அறிவித்தார். உக்ரைன் மக்கள் சிங்கத்தின் தைரியத்தை வெளிப்படுத்தினர். அதிபர் ஜெலன்ஸ்கி சிங்கத்தின் கர்ஜனை எப்படி இருக்கும் என்பதைக் காட்டினார்" என்றார்.
Recommended Video

ஜெலன்ஸ்கி கோரிக்கை
உக்ரைனுக்குப் பிரிட்டன் வழங்கிய இந்த தீர்க்கமான ஆதரவை வரவேற்றதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும், ரஷ்யா மீதான அழுத்தத்தைத் தீவிரப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் மற்ற மேற்கத்திய நட்பு நாடுகளை வலியுறுத்தினார். ரஷ்ய எரிசக்தி வளங்கள் மீது முழுமையான தடை விதிக்க வேண்டிய நேரம் இது என்றும் இது ரஷ்யாவைப் பலவீனப்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications