இங்கிலாந்து பள்ளியில் மாணவிகள் ஸ்கர்ட் அணிய தடை

இங்கிலாந்தின் நார்ஃபோக்கில் உள்ள திஸ் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஸ்கர்ட் அணிந்து வருவதற்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாணவிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட குட்டி குட்டியாக ஸ்கர்ட் அணிந்து வருகிறார்கள். இதனால் தான் பள்ளி நிர்வாகம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.
இந்த தடை வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு சில பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மாணவிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் டிரவுசர் அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும்.
டிரவுசர் வாங்க கஷ்டப்படும் பெற்றோருக்கு பள்ளி நிதியுதவி அளிக்குமாம். மேலும் 7 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு மேக்கப் போட்டு வரவும் தடைவிதிக்கப்படுகிறது.
ஏற்கனவே சில மாணவிகள் டிரவுசர் அணிந்து வருகின்றனர். ஆனால் இனி அனைத்து மாணவிகளும் கட்டாயமாக டிரவுசர் அணிந்து வர வேண்டும்.












Click it and Unblock the Notifications