வந்து விட்டது கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சை.. இங்கிலாந்தில்
லண்டன்: உலகத்திலேயே முதன்முறையாக இயற்கையிலேயே கர்ப்பப்பை இல்லாத பெண் ஒருவருக்கு கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இதன் மூலம் இயற்கையிலேயே கர்ப்பை இல்லாமல், தாய்மை அடைய இயலாமல் தவிக்கும் பெண்களின் கனவு நனவாகப் போகிறது.
மூளைச் சாவு அடைந்தவர்களின் பல்வேறு உறுப்புகள், தேவைப்படும் மற்ற நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை கர்ப்பப்பை இல்லாதவர்களுக்கு அல்லது கர்ப்பப்பை பிரச்சினை உடையவர்களுக்கு தீர்வு இல்லாமல் இருந்து வந்தது.

கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை...
இந்நிலையில், இங்கிலாந்து மருத்துவர்கள் கர்ப்பப்பை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவ உலகில் புதிய புரட்சி செய்துள்ளனர்.

மூளைச்சாவு...
கார் விபத்து ஒன்றில் மூளைச் சாவு அடைந்த பெண் ஒருவரின் கர்ப்பப்பையை, கர்ப்பப்பை பாதிப்புள்ள ஒரு பெண்ணிற்கு வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

மகிழ்ச்சி...
ஆபரேஷன் மூலம் புதிய கர்ப்பப்பை பெற்றுள்ள இப்பெண் வரும் 2017ம் ஆண்டு குழந்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரிய அறுவைச் சிகிச்சை இங்கிலாந்து பெண்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வருட ஆராய்ச்சி...
19 வருட ஆய்விற்கு பல பெண்களின் குழந்தை ஏக்கத்திற்கு பலன் தரும் இந்தக் கண்டுபிடிப்பை லண்டன் இம்பேரியல் காலேஜைச் சேர்ந்த ரிச்சர்ட் ஸ்மித் கண்டுபிடித்துள்ளார்.

10 பெண்கள்...
தற்போது பத்து பெண்களுக்கு இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் உடனடியாக பலன் கிடைக்கவுள்ளதாகவும் இங்கிலாந்து டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வரப்பிரசாதம்...
உண்மையிலேயே இந்த அறுவைச் சிகிச்சை உலகம் முழுவதும் தாய்மை அடைய வழியில்லாமல் தவிக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கு வரப் பிரசாதம் என்று கூறலாம். இது மட்டும் உலக அளவில் பரவலானால் நிச்சயம் பல லட்சம் பெண்களின் நெஞ்சங்களில் பால் வார்த்ததைப் போல அமையும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications