செத்தவன் பிழைத்து வந்த அதிசயம்.. புதின் முகத்தில் கரியை பூசி ₹4 கோடியை சுருட்டிய உக்ரைன் உளவாளிகள்
மாஸ்கோ: ரஷ்யாவைக் காலி செய்யும் வகையில் ஒரு அட்டகாசமான ஆபரேஷனை உக்ரைன் நடத்திக் காட்டியுள்ளது. ரஷ்யக் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த ஒரு முக்கிய தளபதியைக் கொல்ல ரஷ்யா திட்டமிட்ட நிலையில், அந்த மரணத்தைப் போலியாகச் சித்தரித்து ஏமாற்றியுள்ளது உக்ரைன்! அத்தோடு மட்டுமின்றி அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பணத்தையும் ரஷ்யாவிடம் ஏமாற்றி வாங்கியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு தரப்பினரும் முயன்றாலும் கூட மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரஷ்ய படை தனது பிடியை இறுக்கி வருகிறது. இந்தச் சூழலில் புதின் கண்களில் மண்ணை தூவும் வகையில் ஒரு அட்டகாசமான ஆபரேஷனை உக்ரைன் நடத்திக் காட்டியுள்ளது.

ஏமாற்றிய உக்ரைன்
ரஷ்யக் கிளர்ச்சிப் படையில் உள்ள முக்கியமான ஒரு தளபதியின் மரணத்தைப் போலியாக உக்ரைனின் ராணுவப் புலனாய்வு சேவை சித்தரித்துள்ளது. இது மட்டுமின்றி அவரது மரணத்திற்கு ரஷ்யா ஐந்து லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடி) பரிசை அறிவித்திருந்த நிலையில், அதையும் பெற்றிருக்கிறது.. ரஷ்யாவைக் காலி செய்த உக்ரைனின் இந்த சீக்ரெட் ஆபரேஷன் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
ஒயிட் ரெக்ஸ் (White Rex) என்று அழைக்கப்படும் ரஷ்யக் கிளர்ச்சிப் படைத் தலைவரை கொல்ல ரஷ்யா திட்டமிட்டு வந்தது. அவரை கொன்றால் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒயிட் ரெக்ஸை கொன்றுவிட்டதாகவும் உக்ரைன் அறிவித்திருந்தது. ரஷ்யா இதைக் கொண்டாட ஆரம்பித்த நிலையில், அப்போது தான் உக்ரைன் தனது சீக்ரெட் ஆபரேஷன் குறித்த தகவலைப் பகிர்ந்து ரஷ்யா முகத்தில் கரியைப் பூசியது.
என்ன நடந்தது
ஒயிட் ரெக்ஸ்ஸை கொல்ல ரஷ்யா முயன்று வருவதும் அதற்குச் சதி நடப்பதையும் உக்ரைன் தெரிந்து கொண்டது. அவரது உயிரைக் காக்கவும், படுகொலைக்கு உத்தரவிட்டவர்கள் மற்றும் அதைச் செய்யத் திட்டமிட்டவர்களை அடையாளம் காணவும் ஒரு சீக்ரெட் ஆபரேஷனை உக்ரைன் உருவாக்கியது. சுமார் ஒரு மாதக் காலம் இந்த சீக்ரெட் ஆபரேஷனை உக்ரைன் நடத்தியது. இதன் மூலம் ஒயிட் ரெக்ஸ் உயிரைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அதற்கான சன்மானத்தையும் வாங்கியுள்ளது உக்ரைன்.
ரஷ்யாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த இந்த ஒயிட் ரெக்ஸை குறிவைத்து சனிக்கிழமை டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் அவர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது. ஆனால், அவர் கொல்லப்படவில்லை ரஷ்ய உளவுத்துறை ஏமாற்றப்பட்டதாக ஒயிட் ரெஸ்க்கின் கிளர்ச்சிப் படையே பின்னர் அறிவித்தது. இது குறித்து அந்தக் கிளர்ச்சிப் படை மேலும், "ரஷ்ய ஸ்பெஷல் சர்வீஸின் மாபெரும் தோல்வி இது... எங்கள் தளபதி டெனிஸ் கப்புஸ்டின் உயிருடன் இருக்கிறார். அவரது மரணத்திற்காகப் பெறப்பட்ட ஐந்து லட்சம் டாலர்கள், உக்ரைனின் பாதுகாப்புப் புலனாய்வு சிறப்புப் படைகளை வலுப்படுத்தும்" என்று கூறப்பட்டுள்ளது.
வீடியோ
மேலும், அத்தோடு இன்னொரு வீடியோவையும் இணைத்துள்ளனர். அதில் ஒயிட் ரெக்ஸ்ஸை உக்ரைன் சீக்ரெட் சர்வீஸ் தலைவர் கிரிலோ புடானோவ் சந்தித்து வரவேற்கிறார். மேலும், "மீண்டும் உயிருடன் திரும்பியதற்கு வாழ்த்துகள்" என அவர் சொல்வதும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதேநேரம் உக்ரைன் படைகள் இப்படி ஒரு மரணத்தைப் போலியாகச் சித்தரிப்பது இது முதல் முறையல்ல. 2018இல், பிரபல உக்ரைன் செய்தியாளர் அர்காடி பாப்சென்கோ சுட்டுக் கொல்லப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகின. இருப்பினும், மறுநாள் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வந்தது. அதாவது அர்காடி உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து உக்ரைன் சீக்ரெட் சர்வீஸே அந்தப் போலி தகவலைப் பரப்பியது அlன் பின்னரே தெரிய வந்தது.
ஒயிட் ரெக்ஸ்
இந்த ஒயிட் ரெக்ஸ் இருக்கும் ரஷ்ய தன்னார்வப் படைக் குழு என்பது உக்ரைன் ஆயுதப் படைகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போரிடம் ஒரு பிரிவாகும். 2022இல் நிறுவப்பட்ட இக்குழு, வலதுசாரி ரஷ்ய புலம்பெயர்ந்தோரால் உருவாக்கப்பட்டது. புதினின் அரசைக் கவிழ்த்து, உக்ரைன் உண்மையான எல்லைகளை மீட்டெடுப்பதே இவர்களின் முதன்மை நோக்கம்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications