வெடிக்கும் குண்டுகள்.. "தனிமையில்" உக்ரைன்.. வானில் ஆங்காங்கே மஞ்சள் நிறம்.. வெளியான புகைப்படம்
கிவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் இணையதளத்தில் அங்கு நடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்குமாறு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதன் பேரில் இன்று அதிகாலை முதல் ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
உக்ரைனின் விமான தளங்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தங்கள் நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன்
உக்ரைனின் முக்கிய நகரங்களில் இருந்து குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போருக்கு குறுக்கே யார் வந்தாலும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த போரால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது.

பொருளாதார தடை
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளன. கடந்த சில நாட்களாகவே உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டினரை தாயகம் திரும்ப அழைப்பு விடுத்திருந்தது. அது போல் கிவ்வில் உள்ள அந்தந்த நாட்டு தூதரகத்தில் மாணவர்கள் தங்கியுள்ள இடம், தொடர்பு எண் குறித்து கேட்டு வாங்கிக் கொண்டது.

இந்தியா
இந்த நிலையில் இந்தியாவிலிருந்து உக்ரைன் சென்ற விமானம் ரஷ்ய போரை அறிந்தவுடன் மீண்டும் திரும்பியது. உக்ரைன் வான் எல்லையில் ரஷ்ய நாட்டு போர் விமானங்கள் பறந்து வருவதால் உக்ரைனில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் உக்ரைனில் உள்ள கிவ் உள்ளிட்ட விமான நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

செயற்கைகோள் படம்
இதுகுறித்து ஒரு செயற்கைகோள் படம் வெளியாகியுள்ளது. அதில் பின்லாந்து, பெலாரஸ், லித்துவானியா, மோல்டோவா, எஸ்டானியா, ஸ்லோவாகியா உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் விமான போக்குவரத்து குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. அது போல் உக்ரைன் தலைநகர் கிவ்வை சுற்றி விமான போக்குவரத்து இல்லை. இந்த புகைப்படத்தின் மூலம் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவோர் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப ஏதுவாக இருக்கும் என்பதால் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications