தாறுமாறாக பறந்த டிரோன்கள்.. புதினை ஸ்டன் ஆக்கிய உக்ரைன்.. டிரம்ப்பிற்கும் தந்த தரமான பதிலடி!
டெல் அவிவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யா மீது மிகப் பெரிய டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. ஆபரேஷன் ஸ்பைடர் வெப் என்ற இந்தத் தாக்குதல் மூலம் ரஷ்யாவுக்கு மட்டுமில்லாமல்.. அமெரிக்காவுக்கும் சேர்த்தே உக்ரைன் மெசேஜ் அனுப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் தீவிரமாக முயன்று வருகிறது. இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா மீது உக்ரைன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

ராணுவ தளங்கள்
இதில் ரஷ்யாவின் 5 ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டது. மேலும், பல போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் நடந்து கொஞ்சக் காலத்திலேயே பிஸ்னஸ் உக்ரைன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு சமூக வலைத்தள பதிவைப் பகிர்ந்தது. அதில் சீட்டுக் கட்டில் வரும் ராஜா கார்டில் ராஜாவுக்குப் பதிலாக வாளுடன் இருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி படம் இருக்கிறது. பின்னால் முழுக்க முழுக்க சிலந்தி வலைகள் காணப்படுகிறது. அதில் மேலும், "உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தான் டிரோன்களின் ராஜா. இப்போது எந்த கார்டும் இல்லை என்று யார் சொன்னது?" என்று பதிவிடப்பட்டுள்ளது.
டிரம்பிற்கான மெசேஜ்?
இது ரஷ்யாவுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் அதிபர் டிரம்பிற்கும் சேர்த்தே அனுப்பப்பட்ட மெசேஜாகவே பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதிபர் டிரம்ப், "உங்களிடம் இப்போது எந்த கார்டும் இல்லை. எங்களுடன் இருந்தால் தான் உங்களுக்கு நல்லது.. நாங்கள் இல்லை என்றால் உங்களுக்குச் சாதகமாக எதுவும் இருக்காது" என்று கூறியிருந்தார்.
அப்போது இரு தலைவர்களுமே வெள்ளை மாளிகையில் வைத்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அது தொடர்பான வீடியோவும் கூட இணையத்தில் வெளியாகி பேசுபொருள் ஆகியிருந்தது. இப்போது, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவையே அதிர வைக்கும் வகையில் உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. டிரம்பின் பேச்சைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே கார்டு இமேஜ் உடன் ஜெலன்ஸ்கி இருக்கும் போட்டோவை பிஸ்னஸ் உக்ரைன் பகிர்ந்துள்ளது.
ஏன் முக்கியம்
உக்ரைன் நடத்திய தாக்குதலால் எந்தளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்தத் தாக்குதல் உக்ரைனின் பலத்தையும் துணிச்சலையும் காட்டுகிறது. ஏனென்றால் வெறும் எல்லையோர ரஷ்யப் பகுதிகளில் மட்டும் உக்ரைன் தாக்கவில்லை. சுமார் 4000 கிமீ உள்ளே பகுதிகளிலும் இறங்கித் தாக்குதல் நடத்தியுள்ளது.
Ukrainian President Volodymyr Zelenskyy = King of Drones
— Business Ukraine mag (@Biz_Ukraine_Mag) June 1, 2025
Who "doesn't have any cards" now? pic.twitter.com/yYZ4tsIvMZ
அதேபோல தாக்குதல் நடந்த சமயத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிர்ந்த போஸ்ட்டும் முக்கியத்துவம் பெறுகிறது. வெறும் ஆறே லெட்டரில் அவர், "முழுக்க முழுக்க இது உக்ரைன் நடத்திய தாக்குதல்" என்று பதிவிட்டிருந்தார். அதாவது அமெரிக்காவின் எந்தவொரு ஆதரவும் இல்லாமல் உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியது என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.
டைமிங் முக்கியம்
மேலும், இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நேரமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ரஷ்யா உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இரு நாட்டுப் பிரதிநிதிகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கக் கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
உக்ரைன் தனது பலத்தை நிரூபித்துப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அதிக பேரத்தைக் கேட்கும் திறனை இந்த ஆபரேஷன் சிலந்தி வலை உக்ரைனுக்கு வழங்கும். இப்படி ஒரே தாக்குதல் மூலம் ரஷ்யாவுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் மெசேஜ் அனுப்பியுள்ளது உக்ரைன்!












Click it and Unblock the Notifications