ஆபாச படம் ஓகே.. ஆண்டுக்கு ரூ.2,200 கோடி வருமானம்! வருவாய் பற்றாக்குறையால் அரசு எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

கீவ்: ரஷ்யாவுடன் நீடித்து வரும் போரால் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் உக்ரைன், தனது வருவாயை அதிகரிக்க புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. நாட்டில் இதுவரை சட்டவிரோதமாக இருந்து வரும் ஆபாச படங்களையும் அந்த துறையையும் சட்டப்பூர்வமாக்குவதற்கான மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற உள்ளது. இது உக்ரைனுக்கு ஏன் முக்கியமானது. அங்குள்ள மக்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்!

ஆபாசப் படங்களை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.220 கோடி வரி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையை வைத்து போருக்கு தேவையான சுமார் 30,000 ட்ரோன்களை வாங்க முடியும் என்று உக்ரைன் நாடாளுமன்றத்தின் நிதி குழு தலைவர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் தெரிவித்துள்ளார்.

ukraine Russia

ஆபாச படங்கள்

பிரபல ஆபாச படத்தளமான ஒன்லி பேன்ஸ் தளத்தில் உக்ரைனில் இருந்து மட்டும் சுமார் 8,000 கிரியேட்டர்கள் உள்ளனராம்.. இவர்கள் மூலம் இயங்கும் ஆபாச பட துறை துறை கடந்த 2023ஆம் ஆண்டில் சுமார் 131 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் துறை பல ஆண்டுகளாக சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகிறது.

ஏன் வரி?

இது சட்ட விரோதம் என்றாலும் போலீசார் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார்களாம். மேலும், சட்டத்தில் இருக்கும் இந்த ஓட்டையை பயன்படுத்தி சில அதிகாரிகள் லஞ்சமும் பெற்று கொள்கிறார்கள். இதனால் அரசுக்கு வரியாக வர வேண்டிய தொகை சில தனிமனிதர்களுக்கு சென்றுவிடுகிறது. தற்போது ரஷ்யாவுடனான போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு மிக பெரிய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த நிதி பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்கவே ஆபாச படங்கள் மீது வரி விதிக்க முடிவு செய்துள்ளனர்.

போர் காரணமாக சுமார் 27 பில்லியன் டாலர் பட்ஜெட் பற்றாக்குறையை உக்ரைன் எதிர்கொண்டு வரும் சூழலில் தான் ஆபாச படங்களுக்கு வரி விதிக்கப்பட உ்ள்ளது. உக்ரைனில் உள்ள பல ஆபாச பட கிரியேட்டர்களும் கூட தங்கள் துறையை சட்டப்பூர்வமானதாக மாற்றினால் வரி செலுத்த ரெடி என்றே கூறியுள்ளனர். இதற்கு உக்ரைன் மக்களிடையேயும் கூட நல்ல ஆதரவு இருப்பதாகவே தெரிகிறது.

மக்களிடம் வரவேற்பு

இது தொடர்பாக ஆபாச பட மாடல்களை நிர்வகிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஓக்சானா என்பவர் கூறுகையில், "இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்கெடுப்பு பாசிட்டிவாகவே வந்துள்ளது. இந்த மசோதா தாக்கலான பிறகு, எங்கள் நிறுவனத்தை அணுகும் பெண்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. மக்களிடையே இதற்கு ஆதரவு அதிகமாக இருப்பதையே இது காட்டுகிறது" என்றார்.

மசோதா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முதல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது சீக்கிரமே இரண்டாம் கட்ட வாக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது.

கூடுதல் வருவாய்

ஆபாச துறைக்கு வரி விதிப்பதன் மூலம் ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உக்ரைன் பாதுகாப்புக்காக தேவைப்படுவதாக சுமார் 120 பில்லியன் டாலர் தொகையுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது தான். இருந்தாலும், இதை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் ஏற்கனவே இந்த துறையிலிருந்து தொடர்ந்து வருவாய் பெற முடியும் என்பதாலேயே இந்த முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இது வெற்றிகரமாக இருந்தால் உக்ரைனை தொடர்ந்து மேலும் சில நாடுகளும் சட்டப்பூர்வ அந்தஸ்தை தரலாம் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+