டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தையில் நுழையும் ஜெலன்ஸ்கி! பஞ்சாயத்து இப்போதைக்கு தீராது போலயே!
பாரிஸ்: இந்தியாவுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருக்கிறது. ஆக.15ம் தேதி டிரம்பும், புதினும்/புடினும் நேரில் சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கோர்த்துவிட்டிருக்கிறது ஐரோப்பா.
அதாவது பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அதில், உக்ரைன் இல்லாம் நடக்கும் பேச்சுவார்த்தை பலனற்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது ரஷ்யாவுடன் நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் உக்ரைன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இதன் அர்த்தம் என்னவெனில், புதின், டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இடம்பெற வேண்டும் என்பதுதான். ஜெலன்ஸ்கியை வைத்து பேச்சுவார்த்தை நடத்த புதின் ஒப்புக்கொள்ள மாட்டார். ஏற்கெனவே பலமுறை இருவரையும் சந்தித்த பேச வைக்க அமெரிக்கா, துருக்கி என பல நாடுகள் முயற்சித்துவிட்டன. ஆனால் இது எதற்கும் புதின் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் இப்போது மட்டும் எப்படி ஒப்புக்கொள்வார்?
மூன்று வருடங்களுக்கு முன்னர் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா ஆரம்பித்த பின்னர், புதின்-ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்கவில்லை. இந்த சந்திப்பை மீண்டும் சாத்தியமாக்கவும், போரை நான்தான் நிறுத்தினேன் என்று சொல்லிக்கொள்ளவும் ஆசைப்பட்ட டிரம்ப், "ஏம்பா அடம்பிடிக்குற? கொஞ்சம் விட்டுக்கொடுத்தா கெட்டா போயிடுவ?" என்று வசனம் பேசி, சில பிரதேசங்களை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க ஜெலன்ஸ்கிக்கு பரிந்துரைத்தார். ஆனால் ஜெலன்ஸ்கி அதை ஏற்கவில்லை.
எனவே போர் நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில், இந்த பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கியையும் பங்கேற்க வைத்தால் பேச்சுவார்த்தையே நடக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கும் இதுதான் திட்டமாக கூட இருக்கலாம். பேச்சுவார்த்தை நடக்காமல் போனால், உக்ரைனை வைத்து ரஷ்யாவை தொடர்ந்து சீண்டி வரலாம். இப்படி யோசித்து கூட ஜெலன்ஸ்கியை கோர்த்துவிட்டிருப்பார்கள் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச அரசியலை பொறுத்தவரை ரஷ்யாவின் நிலைப்பாடு நியாயமானதாக இருக்கிறது. உக்ரைனும்-ரஷ்யாவும் பக்கத்து நாடுகள். உதாரணத்திற்கு பாகிஸ்தான்-இந்தியா போல. இந்தியாவிலிருந்து பிரிந்துதானே பாகிஸ்தான் தனி நாடாக ஆனது, அப்படித்தான் உக்ரைனும்-ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனி நாடாக ஆனது. இப்போது சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் ஆட்டம் போடுவதை போல அமெரிக்காவுடன் சேர்ந்து உக்ரைனும் ஆடி வருகிறது.
ஒரு கடத்தில் நேட்டோவில் இணைந்து, உக்ரைன் எல்லையில் அமெரிக்க படைகளை குவிக்க ஜெலன்ஸ்கி முயன்றார். பாக். எல்லையில் இந்தியாவுக்கு எதிராக சீன படைகள் குவிக்கப்பட்டால் நாம் சும்மா இருப்போமா? அதையேத்தான் ரஷ்யாவும் செய்து வருகிறது. உக்ரைன் நேட்டோவிலிருந்து விலக வேண்டும், போருக்கு இழப்பீடாக சில பகுதிகளை கொடுக்க வேண்டும் என்பது ரஷ்யாவின் வலியுறுத்தல். உக்ரைன் அதிபர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் ஓவராக பில்டப் செய்து வருகிறார்.
இந்த பஞ்சாயத்து உன்மையில் அமெரிக்கா-ரஷ்யா பஞ்சாயத்துதான். எனவேதான் அலஸ்காவில் ஆக.15ம் தேதி டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இடையில் ஜெலன்ஸ்கி எதுக்கு? உள்ளே இவர் வந்தால் பேச்சுவார்த்தை நடக்காது. போரும் இப்போதைக்கு முடியாது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications