அமெரிக்க அதிபர் ஜோபிடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை.. என்ன பேசினார்?
கீவ்: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசினார்.
Recommended Video
உக்ரைனில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட போர் இன்று 11 ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்றைய தினம் சில மணி நேரங்களுக்கு மீட்பு பணிகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரஷ்யா மீண்டும் தனது தாக்குதலை வெறிக் கொண்டு நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.

நேட்டோ மறுப்பு
அதை நேட்டோ ஏற்க மறுத்துவிட்டது. உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியாவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளாலும் தாக்குப்பிடிக்க முடியாது. உக்ரைன் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போராடுவார்கள் என ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். அவ்வப்போது பொதுவெளியில் டிஜிட்டல் திரையில் தோன்றி மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருகிறார்.

போர் நிறுத்த ஒப்பந்தம்
உக்ரைனில் வோல்னோவாக்கா, மரியபோல் ஆகிய நகரங்களில் போரை நிறுத்த ஒப்பந்தம் போட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரஷ்யாவின் நவீன ரக பீரங்கிகள், துப்பாக்கிகளுக்கு இணையாக உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா கொடுத்த ஆயுதமான ஜாவ்லின் கொண்டு ரஷ்ய பீரங்கிகளை உக்ரைன் ராணுவத்தினர் வீழ்த்தி வருகிறார்கள்.

ஜாவ்லின்
தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசியுள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

அமெரிக்காவின் ஆயுத உதவி
அவரிடம் பாதுகாப்பு, உக்ரைனுக்கான நிதியுதவி, ரஷ்யாவுக்கு எதிராக தொடர் தடைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன் என ட்வீட்டில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி 350 டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமான ஆயுத உதவியாகும். இந்த ட்வீட் போடுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் அமெரிக்க எம்பிக்களுடன் வீடியோ காலில் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications